More
Categories: Cinema News latest news

இதுதான் முதல் படம்!… ஆன்லைன் புக்கிங்கிலும் சாதனை செய்த அண்ணாத்த…

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்க ரஜினி நடித்துள்ள திரைப்படம் அண்ண்ணாத்த இப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த 4ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

போட்டிக்கு பெரிதாக படங்கள் இல்லாத நிலையில் அண்ணாத்த படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. தமிழகத்தில் அண்ணாத்த திரைப்படம் 4ம் தேதி ரூ.11 கோடியும், அதேபோல், 2ம் நாள் நாளில் அதாவது 5ம் தேதியான நேற்று இப்படம் தமிழகத்தில் ரூ.27.15 கோடி என 2 நாட்களில் மொத்தம் ரூ.62.07 கோடியும் வசூல் செய்துள்ளது. உலக அளவில் இதுவரை ரூ.112.86 கோடியை இப்படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertising
Advertising

Annaatthe

அதோடு, ஆன்லைன் புக்கிங்கிலும் இப்படம் சாதனை படைத்துள்ளது. இந்தியா முழுவதும் தியேட்டரில் படம் பார்க்க ஆன்லைனில் புக்கிங் செய்பவர்கள் பெரும்பாலும் Bookmyshow என்கிற இணையதளத்தில்தான் புக் செய்கின்றனர்.

இந்நிலையில், இந்த வெப்தளத்தில் ஒரு மில்லியன் (10 லட்சம்) பேர் அண்ணாத்த படத்திற்கு டிக்கெட் புக் செய்துள்ளனர். லாக்டவுன் முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின் அண்ணாத்த படத்திற்குதான் இந்த அளவு ஆன்லைன் புக்கிங் நடந்துள்ளது. இந்த தகவலை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Published by
சிவா

Recent Posts