Connect with us

அண்ணாத்த வெற்றியா தோல்வியா? டிவிட்டரில் ரசிகர்களின் கருத்து இதுதான்…

annaatthe review

latest news

அண்ணாத்த வெற்றியா தோல்வியா? டிவிட்டரில் ரசிகர்களின் கருத்து இதுதான்…

இன்று ரஜினி ரசிகர்களுக்கு தான் உண்மையான தீபாவளி. ஆம் ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள அண்ணாத்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து மிகவும் ஆர்ப்பாட்டமாக கொண்டாடி வருகிறார்கள்.

annaatthe review

annaatthe review

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படத்தை திரையரங்கில் பார்க்கும் உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். படம் வெளியாகும் முன்பே டிக்கெட் முன்பதிவு ஹவுஸ்புல்லாகி தியேட்டர் ஓனர்களுக்கு கல்லா நிரம்பியது.

annaatthe Reviews

annaatthe Reviews

இந்நிலையில் படம் எப்படி உள்ளது என்று ரசிகர்கள் அவர்களின் கருத்துகளை சோசியல் மீடியாக்களில் பதிவு செய்து உள்ளார்கள் அப்படி என்ன கூறியுள்ளார்கள் என்பதை பார்ப்போம். சிவா இயக்கத்தில் ரஜினி முதல் முறையாக நடித்துள்ள அண்ணாத்த படம் கிராமத்து கதையை மையமாக வைத்து ஒரு பேமிலி எண்டர்டெயின்மென்ட் படமாக உருவாகி உள்ளது.

annaatthe Reviews

annaatthe Reviews

கதைப்படி பஞ்சாயத்து தலைவராக இருக்கும் ரஜினிகாந்த் அநியாயங்களை தட்டிக் கேட்டு சண்டையிட்டு வருகிறார். வெளியூரில் படிக்கும் தன் தங்கை கீர்த்தி சுரேஷ் மீது உயிரையே வைத்துள்ள ரஜினி கீர்த்தி சுரேஷுக்கு கல்யாணம் செய்து பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார். அதன்படியே மாப்பிள்ளையை தேடி கல்யாணமும் முடிவு செய்கிறார். அந்த சமயத்தில் ஒரு பிரச்சினை வர அதை ரஜினி எப்படி சமாளிக்கிறார் என்பது தான் அண்ணாத்த படத்தின் கதை.

annaatthe Reviews

annaatthe Reviews

படத்தின் டிரைலர் வெளியான சமயத்தில் படம் பல விமர்சனங்களை சந்தித்தது. ஆனால் படத்தை பார்த்த ரசிகர்கள் நல்ல கமெண்ட்களையே செய்து வருகிறார்கள். படமும் ரசிகர்கள் எதிர்பார்ப்பை ஓரளவிற்கு பூர்த்தி செய்துள்ளதாம். மீண்டும் பழைய ரஜினியை அண்ணாத்த படத்தில் பார்ப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மொத்தத்தில் அண்ணாத்த படம் குடும்பத்துடன் பார்க்கும் ஒரு நல்ல எண்டர்டெயின்மென்ட் படமாக உள்ளதாம்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top