அடிச்சி தூக்கிய ‘அண்ணாத்த’ சாரக்காற்றே பாடல் - ஒரு மணி நேரத்தில் செய்த சாதனை...
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற தீபாவளி அதாவது நவம்பர் 4ம் தேதி வெளியாகிறது என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.
இப்படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், குஷ்பு, நயன்தாரா, மீனா, சூரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் இடம் பெற்ற ரஜினியின் அறிமுகப்பாடல் ‘அண்ணாத்த அண்ணாத்த’ வீடியோவை படக்குழு கடந்த 4ம் தேதி வெளியிட்டது. இப்பாடலை ரஜினியின் பல அறிமுகப்பாடலை பாடிய மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார்.இப்பாடல் மிகவும் துள்ளலாக உருவாகியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘சாரக்காற்றே’ என்கிற பாடல் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. இப்பாடல் ஒரு காதல் டூயட் பாடலாகும். இப்பாடலை ஷ்ரேயா கோஷல் மற்றும் சித் ஸ்ரீராம் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
இந்த பாடல் வெளியாகி ஒரு மணி நேரம் ஆகியுள்ள நிலையில் இப்பாடலை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். இந்த பாடலில் ஸ்ரேயா கோஷலின் குரல் மிகவும் இனிமையாக இருப்பதாகவும், இந்த பாடல் தங்களின் ஃபேவரைட் எனவும் பலரும் யுடியூப்பில் பதிவிட்டு வருகின்றனர்.