அண்ணாத்த படத்தின் அடுத்த பாடல்.... இதாவது மாநாட்டை பீட் செய்யுமா?....

by சிவா |
annaatthe
X

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற தீபாவளி அதாவது நவம்பர் 4ம் தேதி வெளியாகிறது என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.

இப்படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், குஷ்பு, நயன்தாரா, மீனா, சூரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

rajini

இப்படத்தில் இடம் பெற்ற ரஜினியின் அறிமுகப்பாடல் ‘அண்ணாத்த அண்ணாத்த’ வீடியோவை படக்குழு கடந்த 4ம் தேதி வெளியிட்டது. இப்பாடலை ரஜினியின் பல அறிமுகப்பாடலை பாடிய மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார்.இப்பாடல் மிகவும் துள்ளலாக உருவாகியுள்ளது.

இதையும் படிங்க : நடிகர் சூரி நடித்த முதல் படமே கவுண்டமணியுடன்தான்- அவரே கூறிய தகவல்

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘சாரக்காற்றே’ என்கிற பாடல் வீடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை இமான் இசையில் பல சிறப்பான பாடல்களை பாடிய பாடகி ஸ்ரேயா கோஷல் டிவிட்டரில் வெளியிடவுள்ளார். இந்த பாடலை பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்த பாடல் ரஜினிக்கும்,நயன்தாராவுக்கும் இடையேயான காதல் டூயட் பாடலாக இருக்கும் என்பது போஸ்டரை பார்த்தாலே தெரிகிறது.

சிம்புவின் மாநாடு டிரெய்லர் வெளியாகி 4 நாட்களில் 10 மில்லியன் அதாவது ஒரு கோடி வியூஸ்களை பெற்றது. ஆனால், அண்ணாத்த படத்தின் பாடல் இன்னும் 6 மில்லியனை கூட தொடவில்லை. எனவே, இந்த பாடலாவது மாநாடு பட டிரெய்லரை பீட் செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Next Story