ஜோதிகாவை விட மவுசு குறைஞ்சு போச்சா!.. இது என்னடா ரஜினிக்கு வந்த சோதனை!...
திரையுலகில் பல வருடங்களாவே சூப்பர்ஸ்டார் இருக்கையில் அமர்ந்திருப்பவர் நடிகர் ரஜினி. ரூ.85. கோடி முதல் ரூ.100 கோடி வரை சம்பளம் பெறுகிறார். 70 வயதை நெருங்கி விட்டாலும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறவில்லை.
அஜித் நடித்த விஸ்வாசத்தோடு போட்டி போட்டு பல்பு வாங்கியது ‘பேட்ட’திரைப்படம். வசூலில் விஸ்வாசம் சக்கை போடு போட ‘பேட்ட’ படத்தின் வசூல் குறைந்தது. அதன்பின் வெளியான ‘தர்பார்’ படமும் தயாரிப்பாளருக்கு தோல்வியை கொடுத்தது. எனவேதான், விஸ்வாசம் பட இயக்குனர் சிவாவோடு கூட்டணி அமைத்தார் ரஜினி.
மேலும், தீபாவளிக்கு அண்ணாத்த வருவதால் ‘வலிமை’ படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டாம் என இயக்குனர் சிவாவே அஜித்திடம் கோரிக்கை வைக்கும் அளவுக்கு சென்றது. எனவே, வலிமை பொங்கலுக்கு தள்ளிப்போனது.
அரசியலுக்கு வருவேன் என 25 வருடங்களுக்கு மேல் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்த ரஜினி கடந்த வருடம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த 4ம் தேதி இப்படத்தின் முதல் பாடல், அதாவது ரஜினி அறிமுகமாகும் டைட்டில் பாடல் வெளியானது.
வழக்கம் போல் ரஜினியின் புகழ் பாடும் பாடலாக அது அமைந்திருந்தது. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அப்பாடலை பாடியிருந்தார். இமான் இசை அமைத்திருந்தார். ஆனால், இப்பாடல் ‘படையப்பா’ படத்தின் சிங்கநடை போட்டு பாடல் போலவே இருப்பதாக சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டனர்.
அதோடு, அண்ணாத்த பாடல் வெளியான அதே 4ம் தேதிதான், ஜோதிகா, சசிக்குமார், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ள ‘உடன்பிறப்பே’ டிரெய்லர் வீடியோவும் வெளியானது. 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சுமார், 67 லட்சத்து 59 ஆயிரம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். ஆனால், அண்ணாத்த பாடல் தற்போதுதான் 50 லட்சத்தை கடந்துள்ளது.
இதைப்பார்க்கும் போது, ரஜினியோட மவுசு ஜோதிகாவ விட குறைஞ்சிப்போச்சா? என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.