சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும்,குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வீடியோ நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. இப்படத்தில் அதிரடி சண்டை காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றுள்ளது.
இந்த படத்தில் ரஜினி கிராமத்து ஆளாக நடித்து பட்டைய கிளப்பியுள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான விஸ்வாசம் திரைப்படம் போல் இப்படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த டீசர் வீடியோ வெளியாகி 12 மணி நேரத்தில் இந்த வீடியோவை 40 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். அண்ணாத்த படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெறாத நிலையில், டீசர் வீடியோ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.