அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க... அண்ணாத்த டீசர் வீடியோ ரிலீஸ் அப்டேட்...

by சிவா |   ( Updated:2021-10-11 07:21:25  )
annaatthe
X

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற தீபாவளி அதாவது நவம்பர் 4ம் தேதி வெளியாகிறது என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.

இப்படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், குஷ்பு, நயன்தாரா, மீனா, சூரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற 2 பாடல்கள் வீடியோ ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோ வருகிற 14ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. அன்று ஆயுத பூஜை என்பதால் இந்த டீசர் வீடியோ வெளியாகவுள்ளது. இந்த செய்தி ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story