Connect with us
banner

தமிழகத்தில் எல்லா தியேட்டரிலும் என் படம் ஓட வேண்டும்.! சினிமா பிரபலத்தை அதிர வைத்த அண்ணாச்சி.!

Cinema News

தமிழகத்தில் எல்லா தியேட்டரிலும் என் படம் ஓட வேண்டும்.! சினிமா பிரபலத்தை அதிர வைத்த அண்ணாச்சி.!

தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த பெரிய திரைப்படங்கள் அனைத்தும் வெளியாகிவிட்டன. அடுத்ததாக பொன்னியின் செல்வன், கோப்ரா போன்ற படங்கள் ரிலீசுக்கு காத்து இருக்கின்றன.

இதற்கு இடையில் ஒரு பெரிய திரைப்படம் ரிலீசாக உள்ளது என்றால் அது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடித்துள்ள தி லெஜெண்ட் திரைப்படம் தான். இந்த திரைப்படத்தை ஜேடி-ஜெர்ரி ஆகியோர் இயக்கியுள்ளனர். அண்ணாச்சி தான் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி என ஓர் பான் இந்தியா திரைப்படம் போல ரிலீசாக உள்ளது. இந்த திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இப்படத்தின் ரிலீஸ் அடுத்த மாதம் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை தமிழகம் முழுவதும் பிரபல சினிமா வினியோகஸ்தர் அன்புசெழியன் வாங்கி வெளியிடுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இதற்கான பேச்சுவார்த்தையில் அண்ணாச்சி ஈடுபட்டாராம். அந்த சமயம் அன்பு செழியன் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டாராம்.

இதையும் படியுங்களேன் – சொந்த ஊரில் யாரையும் அழைக்காத விக்னேஷ் சிவன்…நயன்தாரா கிடச்சா இப்படியா?….

அதாவது, ‘ தமிழகத்தில் மொத்தம் எத்தனை திரையரங்குகள் இருக்கும்?’ என கேட்டாராம். அதற்கு அவர், ‘ சுமார் 1000, 1100 திரைகள் (மல்டிபிளக்ஸ் உட்பட) இருக்கும்.’ என கூறினாராம்.  உடனே, அண்ணாச்சி சற்றும் சளைக்காமல், ‘ அத்தனை திரையரங்குகளிலும் நமது படத்தை திரையிட்டால் என்ன?’ என்று கேட்டு விட்டாராம். இதனை கேட்ட அன்புச்செழியன் உட்பட ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் அதிர்ந்து விட்டதாம்.

legend

ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்தால் கூட அத்தனை திரையரங்குகளிலும் ஒரே படம் ரிலீஸ் ஆகாது. ஆனால் இவர் ஜிகர்தண்டா ‘அசால்ட் சேது’ திரைப்படம் போல மொத்த தமிழ்நாட்டிலும் தனது திரைப்படம் தான் வெளியிட வேண்டும் என்று நினைக்கிறாரே என்று பலர் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top