ராஜா என்றால் இசை.. இசை என்றால் ராஜா என இளையராஜாவின் ரசிகர்கள் சொல்வார்கள். அந்த அளவுக்கு பல வருடங்களாக தேன் சொட்டும் பல இனிமையான பாடல்களை கொடுத்தவர். 80களில் இவரின் ராஜ்ஜியம்தான் திரையுலகில் இருந்தது.
ஒரு படம் ஓட வேண்டுமானாலும், வியாபாரம் ஆக வேண்டும் என்றாலும் அதற்கு ராஜாவின் இசை மிகவும் முக்கியமாக பார்க்கப்பட்ட காலம் அது. ரஜினி, கமல், கார்த்தி, பிரபு, சத்தியராஜ், ராமராஜன், மோகன் என பலரின் படங்களுக்கும் ராஜாவின் இசைதான் பிரதானம். குறிப்பாக மோகன் மற்றும் ராமராஜன் ஆகியோரின் படங்கள் ராஜாவின் பாடல்களாலேயே அதிகம் ஓடியது.
மதுரை பண்ணைபுரத்தை சேர்ந்தவர் இளையராஜா. சினிமாவுக்கு வருவதற்கு முன் நாடகங்கள் உள்ளிட்ட பலருக்கும் இசையமைத்துள்ளார். தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் பஞ்சு அருணாச்சலத்தின் உதவியால் அன்னக்கிளி படத்தில் வாய்ப்பு கிடைத்து இசையமைப்பாளராக மாறினார். ஆனால், அவ்வளவு சுலபமாக அவர் வெற்றிபெறவில்லை.
இந்த படம் 1976ம் வருடம் வெளியானது. ஆனால், இந்த படத்திற்கு நல்ல ஓப்பனிங் இல்லை. ஒரு வாரம் தியேட்டரில் கூட்டமே இல்லை. அதற்கு ஒரு முக்கிய காரணமும் இருந்தது. இப்போதுபோல் பாடல்களை உடனே கேட்கும் வசதி எல்லோரிடமும் இல்லாத காலம் அது. சினிமா பாடல்களை திருமணம் நிகழ்ச்சி உள்ளிட்ட சுப காரியங்கள் நடக்கும்போது ஒலிபரப்புவார்கள். குறிப்பாக மங்களகரமான வார்த்தைகள் இருக்கும் பாடலைத்தான் அங்கு போடுவார்கள். அங்குதான் மக்கள் சினிமா பாடல்களை கேட்பார்கள். அப்படி பல நிகழ்ச்சிகளிலும் ஒலிபரப்பினால் அந்த பாடல்தான் ஹிட் என எடுத்துக்கொள்ள வேண்டும்.
அப்படி அன்னக்கிளி படத்தில் இடம்பெற்ற ‘ மச்சான பாத்தீங்களா’ பாடலில் வரும் ‘தலை வாழை இலை போடுங்க’ உள்ளிட்ட வரிகள் இருந்ததால் அந்த பாடல் எல்லா திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களிலும் ஒலிபரப்பானது. அதேபோல், அதேபடத்தில் இடம் பெற்ற அடி ராக்காயி பாடலிலும் திருமணம் சம்பந்தப்பட்ட வரிகள் வரும். எனவே, பல திருமண நிகழ்ச்சிகளிலும் அன்னக்கிளி பட பாடல்கள் ஒலிபரப்பாக, இது என்ன படம் என கேட்டு விசாரித்து மக்கள் ஆர்வத்துடன் தியேட்டருக்கு செல்ல, இரண்டாவது வாரம் முதல் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து படம் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…