Connect with us
annamalai

Cinema News

எல்லாரும் வாய மூடுங்க!… மாநாடு சர்ச்சை குறித்து அண்ணாமலை அறிக்கை…

திரைப்படங்களில் ஏதேனும் ஒரு காட்சி அல்லது வசனத்தை தேடிப்பிடித்து அது தங்களைத்தான் குறிக்கிறது என அரசியல் செய்யும் பழக்கம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் படமும் இப்படி ஒரு பிரச்சனையை சந்தித்தது. இது தொடர்பாக சூர்யா மற்றும் அப்பட இயக்குனர் ஞானவேல் ஆகியோர் விளக்கமளித்தும் இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. தற்போது இந்த பிரச்சனையை மாநாடு படமும் சந்தித்துள்ளது.

இப்படத்தில் ஒரு காட்சில் ‘அமெரிக்காவில் குண்டு வெடித்தால் ஒரு சைக்கா இதை செய்துவிட்டான் எனக்கூறுகிறார்கள்.ஆனால், இந்தியாவில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தால் முஸ்லீம்கள்தான் இதற்கு காரணம் எனக்கூறுகிறார்கள். தீவிரவாதத்தில் ஏது மதம்?’ என சிம்பு பேசுவது போல் ஒரு வசனமும் வருகிறது. அதேபோல், ஒரு ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்து அழிக்கப்பட்ட பலகையும் காட்டப்படுகிறது.

simbu

எனவே, மாநாடு படம் இந்து, முஸ்லீம் ஒற்றுமையை சீர் குலைக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட வேண்டும்… சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும்’ என வேலூரை சேர்ந்த பாஜக பிரமுகர் இப்ராஹிம் தெரிவித்தார். இதையடுத்து, இந்து – முஸ்லீம் நல்லிணக்கத்திற்கு எப்போதும் எதிரானவர்கள் பாஜகவினர். எனவே ஒரு முஸ்லீம் மதத்தை சேர்ந்தவரை வைத்து இப்படி பிரச்சனை செய்ய துவங்கிவிட்டார்கள் என சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் பதிவிட துவங்கினார்.

இந்நிலையில், இதுபற்றி அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘கட்சியில் முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர் கூறும் கருத்து கட்சியின் கருத்தாக மாறும் சூழல் இருக்கிறது. நமது இலக்கு நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு. அதை மனதி கொண்டு செயல்படுவோம். திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விவாதங்கள், கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும்’ என அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

 notice

google news
Continue Reading

More in Cinema News

To Top