நெட்பிளிக்ஸ்ல கல்யாண கேசட் தான் வரல!.. நயன்தாராவோட அன்னபூரணிக்கும் வடக்கன்ஸ் வேட்டு வச்சிட்டாங்களே!

Published on: January 11, 2024
nayanthara
---Advertisement---

Nayanthara: சமீபகாலமாக நயன்தாரா நடிப்பில் வெளியாகும் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியடைவதில்லை. ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் படிப்படியாக முன்னேறி கோலிவுட்டின் முன்னி நடிகையாக மாறினார். பல வருடங்களாக நம்பர் ஒன் இடத்தை கையில் வைத்திருக்கிறார்.

பல வருடங்களாகவே கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவர்தான். ஒரு படத்திற்கு ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். விஜய், அஜித், ரஜினி என எல்லோருடனும் ஜோடியாக நடித்துவிட்ட நடிகை இவர். இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கும் தாயானார்.

இதையும் படிங்க: அயலான் வேற்று கிரகத்தில்தான் ரிலீஸ் ஆகுமா?.. அடுத்தடுத்து சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஆப்பு வருதே!

சினிமாவில் நடிப்பது, குழந்தைகளை கவனிப்பது, புதுப்புது தொழில்களில் முதலீடு செய்வது என பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் அன்னபூரணி. கிராமத்தில் ஆச்சாரமாக வளரும் ஒரு பிராமண பெண் பிரியாணி சமைத்து இந்தியாவின் சிறந்த குக்-ஆக மாறுவதுதான் இப்படத்தின் கதை.

நயனுக்கு கொடுத்த சம்பளம் ரூ.10 கோடியாக இருக்க, இப்படம் தமிழ்நாட்டில் 80 லட்சம் மட்டும் வசூலை பெற்றது. இதனால், தயாரிப்பாளருக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இவ்வளவு மட்டமான தோல்வியை நயன்தாரா சந்தித்திருப்பதால் லேடி சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்தையும் இழந்து வருகிறார். ஒருபக்கம், அன்னப்பூரணி படத்தில் ‘ராமனும் மாமிசம் சாப்பிட்டார்’ என ஒரு வசனம் வருகிறது.

இதையும் படிங்க: விஜயகாந்த் மரண செய்தி கேட்டதும் ரஜினி செய்த முதல் காரியம்.. சொன்னது இதுதான்!…

இதற்கு மகராஷ்ட்டிராவில் சில குரூப் இப்படத்தில் நடித்த நயன்தாரா, ஜெய் ஆகியோர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. ஒருபக்கம், அன்னப்பூரணி திரைப்படம் கடந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் வெளியானது. இந்நிலையில், மும்பையில் சில குரூப் நெட்பிளிக்ஸ் அலுவலகத்தை அடித்து நொறுக்க போய்விட்டனர்.

இதையடுத்து, அன்னப்பூரணி திரைப்படம் ஓடிடியில் இருந்து தூக்கப்பட்டு விட்டது. மொத்தத்தில் நயன்தாராவுக்கு சோதனை மேல் சோதனையாக வந்து கொண்டிருக்கிறது.

 

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.