முதல் நாளிலேயே இவ்வளவு வசூலா!.. நிரூபித்து காட்டிய பிரசாந்த்!.. அடிச்சி தூக்கும் அந்தகன்!..

by சிவா |
anthagan
X

Anthagan: 90களில் தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோவாக இருந்தவர் பிரசாந்த். பல ஹிட் படங்களை கொடுத்தவர். இசையில் ஒரு சறுக்கல் ஏற்பட்டு மீண்டும் நடிக்க துவங்கி இருக்கிறார். அப்படி பிரசாந்த் ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் அந்தகன். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சிம்ரனும், பிரசாந்துக்கு ஜோடியாக பிரியா ஆனந்தும் நடித்துள்ளனர்.

மேலும், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்த படம் 3 வருடங்களுக்கு முன்பே துவங்கப்பட்டது. இயக்குனர்கள் யாரும் செட் ஆகாததால் பிரசாந்தின் அப்பா தியாகராஜனே இப்படத்தை இயக்கினார். அதோடு இப்படத்தை அவரே தயாரித்தும் இருக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்.

இந்தியாவில் வெளியான சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படங்களில் முக்கியமானது பாலிவுட்டில் வெளியான அந்தாதூண். அதன் தமிழ் ரீமேக்காக அந்தகன் வெளியாகியுள்ளது. இது பிரசாந்தின் 50வது படமாக வெளிவந்திருக்கிறது. அதேநேரம், இது ரிமேக் என சொல்வதை விட ரீ கிரியேட் என்று சொல்வதே பொறுத்தமாக இருக்கும் என்றும் பிரசாந்த் சொன்னார்.

anthagan

இந்த படம் பிரசாந்துக்கு ஒரு நல்ல கம்பேக் படமாக அமைந்திருக்கிறது. இந்த படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சென்னையில் நேற்று முதல் காட்சியே சில தியேட்டர்களில் ஹவுஸ்புல் ஆகியிருக்கிறது. சினிமாவில் ராசி ஜோடியாக பார்க்கப்பட்ட பிரசாந்த் - சிம்ரன் இந்த படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. படம் பார்த்த எல்லோருமே படம் நன்றாக இருப்பதாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து படத்திற்கு தியேட்டர்களில் கூட்டமும் அதிகரித்து வருகிறது. மொத்தத்தில் பிரசாந்துக்கு அந்தகன் படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது.

இந்நிலையில், அந்தகன் படம் நேற்று ஒரு நாளில் மட்டும் 50 லட்சம் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், படக்குழு இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இன்று மற்றும் நாளை வார இறுதி என்பதால் இந்த படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story