டாப் ஸ்டார் பிரசாந்தின் ரீ எண்ட்ரிக்கு கை கொடுத்ததா?!.. அந்தகன் பட விமர்சனம் இதோ!...

by Akhilan |
டாப் ஸ்டார் பிரசாந்தின் ரீ எண்ட்ரிக்கு கை கொடுத்ததா?!.. அந்தகன் பட விமர்சனம் இதோ!...
X

நடிகர் பிரசாந்த் நடிப்பில் பலவருடங்களாக உருவாகி வந்த அந்தகன் திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. தியாகராஜன் இயக்கத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா விஜயகுமார், யோகி பாபு, கார்த்தி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

பாலிவுட்டின் ஹிட் படமான அந்தாதூண் ரீமேக் என்பதால் இப்படம் மேலும் எதிர்பார்ப்பை உருவாகி வைத்திருந்தது. பார்வையற்ற பியானோ ஆர்டிஸ்டாக பிரசாந்த் நடித்திருக்கிறார். இவருக்கு லண்டன் சென்று பிரபல கலைஞராக மாற வேண்டும் என்று ஆசை. அந்த நேரத்தில் அவர் வேலை செய்யும் பாரில் பிரியா ஆனந்தை காதலிக்கிறார்.

அப்போது, கார்த்திக்கை சந்திக்க அவர் வீட்டுக்கு செல்லும் போது அங்கு பார்க்க கூடாததை பார்க்கிறார். அப்போது தான் பார்வையற்றவராக நடிக்கும் விஷயம் உடைக்கப்படுகிறது. ஏன் அந்த ஏமாற்றம்? அங்கு என்ன பார்த்தார். அவர் வாழ்வில் என்ன நடக்கிறது? லண்டன் சென்றாரா இல்லையா? என்பது தன் கதையே. பக்கா ஆக்ஷன் திரில்லர் என்பதால் ரசிகர்களை கிளைமேக்ஸ் வரை சீட் நுனியில் உட்கார வைத்து படம் பார்க்க வைக்கிறது.

வழக்கம் போல் பிரசாந்த் நடிப்பில் அசத்தி இருக்கிறார். அவருக்கு ஈடுகொடுத்து நடித்து இருக்கிறார் நடிகை சிம்ரன். மீண்டும் பிரசாந்தின் வில்லி என்பதால் நடிப்பில் அதிக கவனம் கொடுத்து நடித்து இருக்கிறார். திரில்லர் படம் என்பதால் காமெடிக்கு வேலை இல்லை. இருந்தும் யோகி பாபுவின் காட்சிகள் வரவேற்பை பெறுகிறது. பிரியா ஆனந்திற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. கார்த்திக்கிற்கும் படத்தில் பெரிய இடம் இல்லை.

இருந்தும் படம் பெரிய அளவில் பிளஸ்களையே கொண்டுள்ளது. மேலும், இப்படத்தில் சந்தோஷ் நாரயணன் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்கிறது. அதிலும் திரில்லர் பிஜிஎம்களில் அசர வைக்கிறார். இப்படம் ரீமேக் தான் என்றாலும் தென்னிந்திய ரசிகர்களை கவரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. முதலில் பார்ப்பவர்களுக்கு ஏற்படும் அதே அனுபவம் ஒரிஜினல் படத்தினை பார்த்தவர்களுக்கும் கிடைக்கும்.

படத்தின் ஒளிப்பதிவாளர் தன்னுடைய டாப் ஆங்கிள் ஷாட் மூலம் புதிய பாண்டிச்சேரியை காட்சிப்படுத்துகிறார். மேலும் தியாகராஜன் ரெட்ரோ இயக்கமும் படத்திற்கு பெரிய பிளஸாக அமைந்துள்ளது. சின்ன சின்ன இடை சொறுகல்களை தவிர்த்துவிட்டு பார்த்தால் அந்தகன் அல்டிமேட் என்பதில் சந்தேகமே இல்லை.

Next Story