இது முழுக்க முழுக்க தவறான செயல்!.. மிஷ்கினின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பத்திரிக்கையாளர்!..
தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க இயக்குனராக இருப்பவர் இயக்குனர் மிஷ்கின்.
இயக்குனராக மட்டுமில்லாமல் சமீபகாலமாக பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறார்.
சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் முதன் முதலில் தனது எண்ட்ரியை கொடுத்த மிஷ்கின் தொடர்ந்து பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்காக அர்ப்பணித்திருக்கிறார். பிசாசு, சைக்கோ, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், அஞ்சாதே போன்ற நல்ல படைப்புகளை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் ஒரு திரில்லர் இயக்குனர்
என்ற பெயரையும் வாங்கியிருக்கிறார்.
ஆனால் சமீபகாலமாக பொதுமேடைகளில் மிஷ்கின் பேச்சு மிகவும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு கூட டைனோசர்ஸ் என்ற படத்தின் விழாவிற்காக வந்திருந்து பேசிய மிஷ்கின் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை உதிர்த்து விட்டு போனார்.
அதாவது சினிமா விழாக்களுக்காக வந்து பேசுபவர்கள் மயிறு மாதிரி பேசுவானுங்க என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும் சிகரெட் நன்றாக பிடிப்பவர்களால் மட்டுமே ஒரு தரமான படத்தை எடுக்க முடியும் என்றும் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அதுவும் செயின் ஸ்மோக்கரான இயக்குனர் ரமணாவை அருகில் வைத்துக் கொண்டே பேசினார்.
ஏனெனில் இயக்குனர் ரமணா தொடர்ந்து சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானதால் அவருக்கு தொண்டையில் கேன்சர் ஏற்பட்டு அவரின் கணீர் குரல் இன்று காணாமல் போய்விட்டது. அப்படி இருக்கும் போது மிஷ்கின் இப்படி பேசியது வளரும் தலைமுறையினருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.
மேலும் ஒரு நல்ல மனுஷனா இருந்தால் ரமணா இப்படி ஆனதற்கு காரணமே சிகரெட் பழக்கம்தான். அதனால் யாரும் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகதீங்க என்று தானே சொல்ல வேண்டும், சைக்கோ படம் எடுத்த மிஷ்கின் உண்மையிலேயே வர வர சைக்கோவாகவே மாறி வருகிறார் என அந்தனன் கூறினார்.
ஒரு பிரபல நடிகரோ அல்லது இயக்குனரோ என்ன வழிமுறையை பின்பற்றுகிறார்களோ அதையே தான் அவர்கள் ரசிகர்களும் பின்பற்றுவார்கள். இன்று மிஷ்கின் படத்திற்கு என்று சில ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த ரசிகர்களுக்கு தவறான வழியை காட்டுவது போல அல்லவா இருக்கிறது அவரது பேச்சு என்றும் அந்தனன் கூறினார். மேலும் எல்லாம் முடிந்து வீட்டுக்கு போய் தம் அடி, தண்ணி அடி அப்புறம் போய் படுத்து உறங்கு என மிஷ்கின் சொன்னது எவ்ளோ ஒரு அபத்தமான காரியம்? மேடையில் இப்படித்தான் அநாகரீகமாக பேசுவதா? என்றும் தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார் அந்தனன்.
இதையும் படிங்க : மணிரத்தினத்தின் மாஸ்டர் பீஸ்!.. பாகுபலி 2-ஐ விட மாஸ்!… பொன்னியின் செல்வன் 2 டிவிட்டர் விமர்சனம்….