Cinema News
ஏகே-ன்னு கூப்பிடுங்க!. அஜித் சொன்னதுக்கு பின்னாடி இருப்பது ஜோதிடமா?!.. லீக்கான அப்டேட்!…
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருப்பவர் அஜித்குமார். சினிமா பின்னணி எதுவும் இல்லாத குடும்பத்தில் இருந்து சினிமாவில் நுழைந்து சாதித்து காட்டியிருக்கிறார். பல தடைகளை, வலிகளை, அவமானங்களை தாண்டி இந்த இடத்தை பிடித்து காட்டியிருக்கிறார். அமராவதி பாடம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
துவக்கத்தில் சாக்லேட் பாய் என்கிற இமேஜ் இருந்தாலும் ஒரு கட்டத்தில் ஆக்ஷன் ரூட்டுக்கு மாறினார். பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் அவரை மாஸ் ஹீரோ ஆக்கியதோடு அவருக்கு ரசிகர்களையும் உருவாக்கியது. தீனா படத்திலிருந்து இவரை ரசிகர்கள் தல என சொல்ல துவங்கினார்கள்.
இதையும் படிங்க: டேக் ஆப் ஆகும் வாடிவாசல்!.. லண்டன் பறக்கும் வெற்றிமாறன்!.. பரபர அப்டேட்!…
அஜித்தின் படம் தீபாவளிக்கு வெளியானால் ‘தல தீபாவளி’ என பேனர் வைத்தார்கள் அஜித் ரசிகர்கள். தமிழ்நாட்டில் ‘தல’ என்றாலே அது அஜித்குமார் என்கிற நிலையும் உருவானது. விஜயின் போட்டி நடிகராக பார்க்கப்பட்ட அஜித் படப்படியாக முன்னேறி இப்போது விஜய்க்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.
பல வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றங்களை கலைத்த நடிகர் இவர். இந்த தைரியம் இதுவரை எந்த நடிகருக்கும் வரவில்லை. சூர்யாவின் அப்பா சிவக்குமார் மட்டுமே தனக்கு ரசிகர் மன்றங்கள் வேண்டாம் என மறுத்தவர். அஜித்தின் அந்த முடிவு விஜயையே ஆச்சர்யப்படுத்தியது.
அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்துவிட்டு குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில வருடங்களுக்கு முன் என்னை இனிமேல் தல என அழைக்க வேண்டாம் அஜித்குமார் அல்லது சுருக்கமாக ‘ஏகே’ என அழையுங்கள் என அஜித் அறிக்கையே வெளியிட்டார்.
இந்நிலையில், இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய வலைப்பேச்சு அந்தனன் ‘அஜித்துக்கு ஜாதகத்தில் அதிக நம்பிக்கை உண்டு. அவரே நன்றாக கணித்து ஜோசியம் பார்ப்பார். அப்படி பார்த்துதான் ஏகே என அழைப்பது தனது வளர்ச்சிக்கு உதவும் என தெரிந்துகொண்டு அப்படி சொல்லி இருக்கிறார்’ என கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: டைவர்சா எப்போ? ஜெயம் ரவி அறிக்கைக்கு ஆர்த்தி வெளியிட்ட அதிரடி பதில்!.. செம டிவிஸ்டா இருக்கே..