ரஜினிகாந்த் இஸ்லாமியராக நடிக்க காரணம் இதுதான்- மூத்த பத்திரிக்கையாளர் ஓப்பன் டாக்...
ரஜினிகாந்தின் "ஜெயிலர்" திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கும் வேளையில் நேற்று "லால் சலாம்" திரைப்படத்தின் ரஜினிகாந்த் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்தது. மிகவும் அட்டகாசமான போஸ்டரில் ரஜினிகாந்த் இஸ்லாமிய வேடத்தில் ஒரு கலவரத்தின் பின்னணியில் இருந்து நடந்து வருகிறார். "மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம்" என்று அதில் குறிப்பிட்டிருந்தபடியால் இதில் ரஜினிகாந்த் "மொய்தீன் பாய்" கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது தெரியவருகிறது.
எனினும் இத்திரைப்படத்தின் போஸ்டரை சிலர் கேலிக்குள்ளாக்கி வருகின்றனர். இணையத்தில் பலரும் தொப்பி வாப்பா பிரியாணி கடையின் லோகோ போல் இருப்பதாக கிண்டல் செய்தும் வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன், இத்திரைப்படத்தில் ரஜினியின் கதாப்பாத்திரம் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
"தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் தமிழ்நாட்டில் திரையிடப்படவில்லை என்றாலும் தற்போது இத்திரைப்படம் 30 கோடிகளை வசூல் செய்துள்ளது. இவ்வாறு இஸ்லாமிய வெறுப்பை பரப்ப வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு திரைப்படங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் வேளையில் ரஜினிகாந்த் ஒரு இஸ்லாமியராக தோன்றி அந்த போஸ்டர் வெளிவருவது என்பது மிகவும் பாஸிட்டிவான விஷயம். படத்தில் நிச்சயமாக ரஜினிகாந்தை ஒரு நல்லவராகத்தான் காட்சிப்படுத்துவார்கள். அப்படி இருக்கும்போது பலருக்கும் இஸ்லாமிய வெறுப்பு கருத்து இருக்கிறது, ஆனால் எனக்கு வேறு ஒரு கருத்து இருக்கிறது என துணிச்சலாக இறங்கியிருக்கிறார் ரஜினிகாந்த்" என்று அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டார் அந்தணன்.