அங்கவச்சி அசிங்கப்படுத்துனாங்க!. விஜய் அப்பவே வீக் ஆயிட்டாரு!.. பிரபலம் சொன்ன தகவல்
நடிகர் விஜயின் சினிமாவைப் பற்றி ஒரு பக்கம் பேச்சு இருந்தாலும் அவருடைய அரசியல் வருகையை பற்றிய அப்டேட்டுகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் விஜயின் அரசியல் பிரவேசம் எப்படி இருக்கிறது எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி பிரபல பத்திரிக்கையாளரான அந்தணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
தைரியம்தான் முக்கியம்
விஜயகாந்த் மாதிரி தைரியமாக விஜய் அரசியல் எதுவும் பேசவில்லை. ஆனால் போகப் போக பேசுவாரா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரசியலுக்கு என்று வந்து விட்டால் தன் கட்சிக்கொடி மற்றும் தலைமை அரசு எதிர்ப்பது இவை எல்லாவற்றையும் படங்களில் காட்ட வேண்டும். அதைத்தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் .மற்றபடி நாகரீக அரசியல் என்பது வேலைக்கு ஆகாது என்று அந்தணன் கூறினார்.
அதுவும் தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்றால் அந்த அரசியல் நாகரிகத்தோடு அவர் இருந்தால்தான் மக்கள் அவரை ஆதரிப்பார்கள். அதாவது இப்போதைய அரசியல், எதிர்க்கட்சியை சார்ந்தவர்களை மாறி மாறி திட்டுவதும் பேசுவதும் தான். அதை விஜய் செய்தால் தான் அவருடைய ரசிகர்கள் ஆதரிப்பார்கள்.
படங்களின் மூலம் செக்
மெர்சல், சர்க்கார் போன்ற படங்கள் மிகவும் சர்ச்சையாகவே பேசப்பட்டன. சர்க்கார் படத்தில் இலவசங்கள் கொடுப்பதை எதிர்க்கும் படியான கதையில் இருந்தது. மெர்சல் படத்தில் ஜி எஸ் டி வரியை பற்றி விமர்சிக்கப்பட்டது. ஆனால் சர்க்கார் படத்தில் இலவசமாக கொடுப்பதையே தவறு எனக் கூறிய விஜய் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் ஆடு மாடுகளை இலவசமாக கொடுத்தவர் விஜய் தான். அதேபோல் இப்பொழுது மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களையும் இலவசமாக தருகிறார் .எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் எனக் கூறினார் அந்தணன்.
ஒரு மனிதனை நோண்டிக்கிட்டே இருந்தா யாரும் சும்மா இருப்பார்களா? அந்த ஒரு கோபம் தான் விஜய்க்கு அரசியலில் வரவேண்டும் என்ற எண்ணத்தை வரவழைத்திருக்கும். மேலும் விஜய் பேசிய பழைய வீடியோக்களை எல்லாம் ரசிகர்கள் இப்பொழுது இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர். அப்போது ஒரு சில பேட்டிகளில் மிகவும் கோபமாக அரசியலை விமர்சிக்கும் மாதிரியான பேட்டியை கொடுத்திருப்பார்.அதை வைத்துக் கொண்டு ரசிகர்கள் அப்போ விஜய் கூறினார் என்று இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் .
கொட நாட்டில் அவமானத்தப்பட்ட விஜய்
ஆனால் அந்த விஜய் எப்பொழுது வீக் ஆனார் என்றால் கொடநாட்டில் ஜெயலலிதாவை பார்க்கப் போன இடத்தில்தான் என அந்தனன் கூறினார். அந்த சமயத்தில் விஜயை பார்க்க விடாமல் அவமானப்படுத்தி திருப்பி அனுப்பினார்கள். அதனால் விஜய் ஒரு மன்னிப்பு கேட்கும் ஒரு வீடியோவை வெளியிட்டார். மேலும் எஸ்.ஏ.சி அந்த வீடியோவை வெளியிட வேண்டாம் என கூறியும் விஜய் வெளியிட்டார். அந்த வீடியோவால் தான் விஜய்க்கும் அவருடைய தந்தைக்கும் பிரச்சினையே ஏற்பட்டது என்றும் அந்தணன் கூறினார். மேலும் விஜய்யின் அரசியல் இன்னும் ஒரு தைரியமாக இருந்தால் அவர் அடைய வேண்டிய இடத்தை கண்டிப்பாக அடைய முடியும் என்று கூறினார்.