வசந்தபாலன் சொன்னது உண்மை கிடையாது..-இந்தியன் படத்தின் உண்மை நிலையை விளக்கிய பத்திரிக்கையாளர்!..

by Rajkumar |   ( Updated:2023-04-06 09:06:39  )
வசந்தபாலன் சொன்னது உண்மை கிடையாது..-இந்தியன் படத்தின் உண்மை நிலையை விளக்கிய பத்திரிக்கையாளர்!..
X

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன். இந்தியன் படம் துவங்கி பல படங்களில் இயக்குனர் வசந்தபாலன், ஷங்கருக்கு உதவி இயக்குனராக இருந்துள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வசந்தபாலன் இந்தியன் திரைப்படம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்தார். அதாவது இந்தியன் திரைப்படத்தில் கமலின் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது கமலிடம் எப்படி அந்த சண்டை காட்சியை செய்ய வேண்டும் என செய்து காட்டியுள்ளார் வசந்தபாலன்.

ஆனால் கமல் அதை ஒழுங்காக செய்யாததால் மீண்டும் அதை செய்து காட்டியுள்ளார் வசந்தபாலன். இந்த செயல் கமலுக்கு கோபத்தை ஏற்படுத்தவே அவர் அனைவரையும் கத்த துவங்கியுள்ளார். இதை அவர் பேட்டியில் பேசியிருந்தார்.

உண்மையை விளக்கிய அந்தணன்:

இந்த நிலையில் இதுக்குறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன் கூறும்போது சில உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். முதியவர் வேடம் போட்ட கமலுக்குதான் இந்த காட்சி எடுக்கப்பட இருந்தது. கமலுக்கு அந்த முதியவர் வேடம் போடவே மூன்று மணி நேரம் ஆகும்.

அந்த வேடம் போட்டப்பிறகு முதுகில் அரித்தால் கூட சொறிய கூடாது. அப்படி அவர் சொறிய நினைத்தால் அவரது மேக்கப் பிய்ந்துவிடும். அந்த மேக்கப்பை அப்படியே வைத்திருப்பது அவ்வளவு சிரமம்.

இதில் அவர் பெல்டி அடித்து சண்டை செய்தால் கண்டிப்பாக மேக்கப் பிய்ந்துவிடும். அதற்காகவே கமல் அந்த சமயத்தில் கோபமடைந்ததாக கூறப்படுகிறது என படத்தில் பணிப்புரிந்த உதவி இயக்குனர் கூறியதாக அந்தணன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இந்தியன் படப்பிடிப்பில் கமலுக்கு வந்த கோபம்!.. தெறித்து ஓடிய சங்கர்… இப்படி எல்லாம் நடந்துச்சா?!..

Next Story