எஸ்.கே. இஷ்டத்துக்கும் பேசி கமலை இப்படி சிக்கல்ல மாட்டி விட்டாரே..! உலகநாயகன் இனி என்ன செய்வார்?
சமீபத்தில் கொட்டுக்காளி பட விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது தனுஷ் ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஊட்டியுள்ளது. அதன் எதிரொலியாக எஸ்.கே. நடித்த அமரன் படத்தின் டீசருக்கு விமர்சனங்களில் அவரைக் கிழித்துத் தொங்க விட்டுள்ளனர்.
சிவகார்த்திகேயன் யாரைச் சொன்னாருன்னு தெரியவில்லை. ஆனால் ஊடகங்களில் தனுஷைத் தான் குறிப்பிடுவதாகப் பலரும் பேட்டி கொடுத்தனர். நான் மற்றவர்கள் மாதிரி நான் தான் இவருக்கு வாழ்க்கையைக் கொடுத்தேன்னு விளம்பரம் செய்றது இல்லன்னு அவர் அப்போது தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படிப் பார்க்கும்போது தனுஷ் தான் சிவகார்த்திகேயனுக்கு வாழ்க்கையைக் கொடுத்தாலும் அவர் எந்த மேடையிலும் அப்படி சொன்னது இல்லை. அப்படி இருக்கும்போது எஸ்.கே. வும் அப்படிப் பேசி இருக்க வேண்டிய அவசியமில்லை. சரி. என்னதான் மனக்கசப்பு இருந்தாலும் இப்படிப் பேசியிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இது கமல்ஹாசனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வலைப்பேச்சு அந்தனன் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். வாங்க என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.
கமல்ஹாசன் சிவகார்த்திகேயனை வச்சி 120 கோடிக்குப் படம் எடுக்கிறாரு. இந்தப் படத்தோட பட்ஜெட் 100 கோடி. ஆனா செலவு மேல செலவு வந்து 120 கோடியா ஆகிடுச்சு. அப்பவும் அவர் அதை சரின்னு எடுக்கிறாரு. அவ்வளவு பெரிய வேலையை அவர் செய்யும்போது சிவகார்த்திகேயன் இப்படி பேசும்போது அவரது நிறுவனத்தையும், படத்தையும் பாதிக்கும் அல்லவா... இதை சிவகார்த்திகேயன் நினைக்க வேண்டாமா?
இஷ்டத்துக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிடறாரு. அந்தப் படம் வரும்போது மொத்த தனுஷ் ரசிகர்களும் திருப்பி நின்னா படம் என்னாகும்? இது நடக்குறதால தான் சொல்றேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இப்போதெல்லாம் முன்பு மாதிரி இல்லை. ஆடியன்ஸ் ரொம்ப வழிப்புணர்வோடு இருக்காங்க.
ரசிகர்களே ஒரு படத்தைப் பார்த்ததும் விமர்சனம் எழுதுற அளவுக்கு சமூக வலைதளங்கள் அவங்களை வளர்த்து விட்டுருக்கு. அப்படி இருக்கும்போது சினிமா பிரபலங்கள் எங்கே எப்படி என்னத்தைப் பேசுறாங்கன்னும் அவங்க நோட் பண்ணிக்கிட்டுத் தான் இருக்காங்க.
அதனால சிவகார்த்திகேயன் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசாம தன்னோட வேலையைக் கவனிக்கிறது நல்லதுன்னு பலதரப்பு ரசிகர்களும் எதிர்பார்க்கிறாங்க. ஒரு நல்ல திறமையான நடிகர் இப்படி பேசுவது அவருக்கு மட்டுமல்ல. அவரைச் சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதே உண்மை.