இளையராஜா ஒரு பைசா கூட உதவி பண்ணல!.. மஞ்சுமல் பாய்ஸ் விவகாரம் இதுதான் பிரச்சனை.. பிரபலம் தகவல்!..

மஞ்சுமல் பாய்ஸ் படம் 240 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டிய நிலையில், அந்த படம் மிகப்பெரிய லாபத்தை அடைந்திருப்பதை அறிந்து கொண்ட இளையராஜா தற்போது அந்த படத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் இயக்குனர் சிதம்பரம் குணா படத்தில் இடம் பெற்ற “ கண்மணி அன்போடு காதலன்” பாடலுக்கு உரிய உரிமம் பெற்ற பின்னர் தான் பயன்படுத்தினோம் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஏ.ஆர். ரஹ்மான் பாட்டா இது?.. எல்லாமே டபுள் மீனிங்கா கேட்குதே!.. எல்லாம் தனுஷ் பார்த்த வேலையா?..
இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய நிலையில், மீண்டும் அந்த படத்தின் தயாரிப்பாளர் அனுமதி பெற்று விட்டோம் எனக் கூறி இருக்கிறார். ஆனால், அவர்கள் இளையராஜாவிடம் அனுமதி பெறவில்லை என்றும் படத்தின் தயாரிப்பாளரிடம் அனுமதி பெற்றதாக கூறுகின்றனர்.
அந்தப் படத்தின் தயாரிப்பாளரை கமல்ஹாசன் தான் என்றும் இன்னொருவர் பெயரில் குணா படத்தை தயாரித்தார். கமல்ஹாசனை மஞ்சுமல் படக்குழுவினர் வந்து சந்தித்து அவருக்கு சேர வேண்டிய தொகையை செலுத்தி விட்டு சென்று விட்டதாகவும், ஆனால் இளையராஜாவுக்கு அவர்கள் கப்பம் கட்டாத நிலையில் தற்போது அதற்காகத்தான் அவர் வழக்கு தொடர்ந்தார் என வலைப்பேச்சு அந்தணன் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: முதல்வர் ஆவதற்கு முன் நம்பியாருடன் எம்.ஜி.ஆர் போட்ட சண்டை!.. நடந்தது இதுதான்!..
இளையராஜா காப்புரிமை கேட்பது சட்டப்படியாகத்தான் உள்ளது என்பதால் அவர் மீது எந்தவொரு தவறும் சொல்ல முடியாது. பாடலுக்கான காப்புரிமை சட்டம் அப்படி இருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர் அந்த படத்துக்குள் பாடலை பயன்படுத்தினால் பிரச்சனை இல்லை என்றும் அந்த பாடலை அந்த படத்தை தாண்டி பிற இடங்களில் பயன்படுத்த உரிமைத் தொகை கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், இந்த உரிமைத் தொகையை எல்லாம் வாங்கி இளையராஜா நலிந்த இசை கலைஞர்களுக்கு உதவி செய்கிறார் என்பது எல்லாம் சுத்த பொய் என்றும் அவர் ஒத்த பைசா கூட யாருக்கும் கொடுக்க மாட்டார் என்றும் அந்தணன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: என்றும் இளமையாக இருக்க ராமராஜனுக்கு நம்பியார் கொடுத்த அட்வைஸ்! இதுதான் காரணமா?