மதுரையில் அசிங்கப்பட்ட பிரபல பாடகர்.. அதற்காக அவர் எழுதிய பாடல்... மாஸ் ஹிட் அடித்த பின்னணி...

தமிழ் சினிமாவின் குத்து பாடலில் தற்போது கொடிக்கட்டி இருக்கும் அந்தோணி தாசனின் முக்கிய ஹிட் பாடலில் அவருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் ஒன்றும் அடங்கி இருக்கிறதாம்.

அந்தோணி தாசன் நாட்டுப்புற பாடகராக தனது வாழ்வினை தொடங்கி தற்போது தமிழ் திரையுலகில் பணியாற்றி வருகிறார். நாட்டுப்புற பாடல் மட்டுமல்லாது வெவ்வேறு ஸ்டைலிலும் பாடுவதில் கில்லாடி அந்தோணி தாசன்.

antony dasan

இசை நிகழ்ச்சிகளைத் தவிர, அவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக அவரே பாடிய பாடல்களில் கேமியோ தோற்றத்தில் வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டாவில் கேங்ஸ்டராக நடித்துள்ளார். அப்படத்தில் வந்த ஏய் பாண்டி நாட்டு கொடியின் மேலே பாட்டைப் பாடியிருப்பார். இப்பாட்டினை எழுதியதும் அவரே தானாம். இந்த பாடல் உருவாகியதற்கு காரணம் அவருக்கு மதுரையில் நடந்த ஒரு அவமானம் தானாம்.

இதையும் படிங்க: உயிர் போகும் நிலையில் இருந்த எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுத்த நடிகர்… பின்னாளில் வில்லனாக மாறிய சுவாரஸ்ய சம்பவம்…

ஆரம்பக்காலங்களில் திருவிழாக்களில் கச்சேரி செய்வது இவருக்கு வழக்கம். அப்படி தான் ஒருமுறை மதுரையில் இருக்கும் ஒரு கிராமத்தில் திருவிழாவில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். ராத்திரி முழுவதும் நிகழ்ச்சியை நடத்தியவருக்கு காலையில் பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது.

திருவிழாவுக்கு புக் பண்ணவர் காசை வாங்கிட்டு அந்த இடத்தினை விட்டு ஓடிட்டார். அங்கிருந்தவர்களும் காசை கொடுத்தாச்சு என்று கிளம்பிவிட்டனர். கையில் ஒரு பைசா இல்லாமல் மனைவியுடன் பரிதவித்து நின்று இருக்கிறார். அப்புறம் அங்குள்ளவர்களிடம் கெஞ்சி பஸ்ஸூக்கு மட்டும் காசு வாங்கிட்டு மாட்டுத்தாவணிக்கு போயிருக்கிறார்.

கூட தன் மனைவியும் இருக்க அந்த பஸ் அப்போ வைகை ஆற்றை கடந்து இருக்கு. அப்போ அவர் மனதில் தோன்றிய வரிகள் தான் வைகை ஆத்து மண்ணு ஒரு நாள் என்பேரைச் சொல்லும் என்பதாம். இதை வச்சு தான் அந்த பாடலையே எழுதினாராம். சமீபத்தில் அனிருத் இசையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் வெளியான டிப்பம் டப்பம் பாடலை பாடியது அந்தோணி தாசன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுப்போல இவரின் சொடக்கு மேல சொடக்கு போடுது பாடல் பல தரப்பிலும் பிரபலமாகவே இருந்து வருகிறது.

Related Articles
Next Story
Share it