நடிகை அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன்.
பின்னர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. தெலுங்கில் ‘பிரேமம்’, ‘தேஜ் ஐ லவ் யூ’, ‘உன்னடி ஒகடே சிந்தகி’, ‘ ஹலோ குரு ப்ரோமோ’ ஆகிய படங்களில் நடித்து தெலுங்கிலும் பிரபலமானார்.
கடைசியாக தமிழில் அனுபமா அதர்வாவுடன் இணைந்து நடித்த ‘தள்ளி போகாதே’ படம் வெளியானது. தற்போது தமிழில் ஜெயம் ரவியுடன் சைரன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் வெளியான ஹெலன் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருகிறார். கார்த்திக்கேயா – 2 படத்தின் வெற்றியால் இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகையாக அனுபமா பரமேஸ்வரன் பிரபலமாகி உள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் பட்டர்பிளை, 18 Pages ஆகிய படங்கள் தெலுங்கில் வெளிவந்தன.
அனுபமா பரமேஸ்வரன் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர். அதனால் தன்னுடைய புகைப்படங்களையும், வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவது வழக்கம். சமீபத்தில் போலந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் அனுபமா பரமேஸ்வரன், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்று ஜாலியாக கூறி நெகிழி தாளை மோதிரம் வடிவில் சுருட்டி விரலில் அணிந்துள்ளார். இந்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்கள் மாப்பிள்ளை யாரு? என ஜாலியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.