அனுபமாவுக்கு இப்படி ஒரு நிலைமையா.?! ரசிகர்கள் செயலால் தர்ம சங்கடமான 'அந்த' சம்பவம்.!
மலையாளத்தில் நிவின் பாலி நடித்து, அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் பிரேமம். இந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் இருப்பார்கள் மூன்று பேருமே நல்ல வரவேற்பை பெற்றனர்.
அதில் ஹீரோ முதலில் காதலிக்கும் பெண்ணாக வரும் ஹீரோயின் தான் அனுபமா பரமேஸ்வரன். இவர் பிரேமம் படத்திற்கு பிறகு , பல்வேறு திரைப்படங்களில் அடுத்தடுத்து நடிக்க ஆரம்பித்து விட்டார். தமிழில் தனுஷ் நடித்த கொடி, படத்திலும் நடித்து இருந்தார்.
அதன் பிறகு தெலுங்கிற்கு சென்ற அங்க தற்போது முன்னணி இளம் இநடிகைகளில் ஒருவராகி விட்டார். சமீபத்தில் ரௌடி பாய்ஸ் எனும் தெலுங்கு படத்தில் செம ஹாட்டாக நடித்து லிப் லாக் முத்த காட்சியில் எல்லாம் நடித்து சென்சேஷனல் ஹீரோயினாக மாறிவிட்டார்.
இதையும் படியுங்களேன் - வேட்டை மன்னன் டிராப்க்கு காரணம் விக்னேஷ் சிவனா.?! வெளியான அதிர்ச்சி தகவல்.!
இவர் தெலுங்கானாவில் உள்ள ஒரு பிரபல கடை விழாவுக்கு சென்றிருந்தார். இவர் வருவதை அறிந்து வந்த ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்து விட்டனர். இதனை பார்த்த விழா ஏற்பாட்டாளர்கள் கொஞ்சம் திணறிதான் விட்டனர். அதிலும், ரசிகர்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு, பலர் செல்பி எடுக்க முண்டி அடித்து கொண்டு வந்தனர்.
அதுவும், சிலர் அனுபமா வந்த காரில் காற்றை பிடுங்கிவிட்டு சென்றுவிட்டனர். இதனை பார்த்த விழா ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி யாகி அப்புறம் எப்படியோ ஒருவழியாக அந்த இடத்தில் இருந்து அனுபமாவை பத்திரமாக வெளியேற்றினர்.