அதுல மட்டுமில்ல.. இதுலயும் நீ க்யூட்டுதான்!.. அனுபமாவை கொஞ்சும் ரசிகர்கள்....
மெகா ஹிட் அடித்த மலையாள திரைப்படமான ‘பிரேமம்’உள்ளிட்ட ஏராளமான மலையாள படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன்.. தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் நடித்தார். அவர் நடித்த ஒரே தமிழ் படம் அதுதான். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை.
சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார். அங்கு பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, அவ்வப்போது, விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: அரைகுறை உடையில் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை…ரீல்ஸ் வீடியோ அக்கப்போர்!…
இந்நிலையில், மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வந்த அவர் புடவை அணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.