நான் செய்த மிகப்பெரிய தவறு அது!...இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட அனுபமா....
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் நடித்தவர். ஆனால், தெலுங்கில் இவருக்கு நல்ல மார்க்கெட் உண்டு. எனவே, அங்கு அதிக படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது கார்த்திகேயா 2 என்கிற தெலுங்கு படத்தில் அனுபமா நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் நிகில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கியுள்ளார். இப்படம் கடந்த 13ம் தேதி ஆந்திராவில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நடந்தது. இதில், படக்குழுவிர் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய அனுபமா ‘இப்படத்தின் படப்பிடிப்பு குஜராத்தில் நடைபெற்று கொண்டிருந்த போது எனக்கு காயமே ஏற்பட்டது. மேலும் கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டேன். கடைசிநாள் படப்பிடிப்பின் போது சில காரணங்களால் படப்பிடிப்பு நடக்கவில்லை.
இதனால், இயக்குனரிடம் கோபத்தை காட்டினேன். இப்போது அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு அதுதான். எனக்கு இப்படத்தில் சிறந்த கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குனருக்கு நன்றி’ என அந்த மேடையில் அனுபமா பேசினார்.