Connect with us
banner

75 லட்சம் இருந்தா ஓகே., இல்லனா ஓடிருங்க.! தயாரிப்பாளரை பதற வைத்த லிப்லாக் பட்டாம்பூச்சி.!

Cinema News

75 லட்சம் இருந்தா ஓகே., இல்லனா ஓடிருங்க.! தயாரிப்பாளரை பதற வைத்த லிப்லாக் பட்டாம்பூச்சி.!

கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் திரைப்படம் பல்வேறு புதுமுகங்களுக்கு சினிமாவின் வாய்ப்பளித்து உள்ளது. அதில் ஹீரோயினாக  களமிறங்கிய சாய்பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் ஆகிய மூவருமே இந்திய சினிமாக்களில் முக்கிய நடிகர் நடிகைகளாக இருந்து வருகின்றனர்.

anupama

இதில் சாய்பல்லவி தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக மாறிவிட்டார். மடோனா செபாஸ்டியன் ஒரு சில தமிழ் படங்களிலும் தற்போது மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். அனுபமா பரமேஸ்வரன் தெலுங்கில் இளம் கதாநாயகியாக இருக்கிறார்.

அண்மையில் இவர் ரவுடி பாய்ஸ் எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து இருந்தார். அதில் ஹீரோவுடன் முத்தக்காட்சி, கிளாமரான பாடல் காட்சி என்று ரசிகர்களை கிறங்கடித்து விட்டார். ஆனாலும் அதற்கு பிறகு அவர்களுக்கு போதிய பட வாய்ப்பு வரவில்லை.

anupama 3

இதையும் படியுங்களேன் – நான் அந்த வயசுலயே எல்லாம் பாத்துட்டேன்.! ராஷி கண்ணாவின் மனதை உலுக்கிய கசப்பான சம்பவம்.!

இருந்தாலும், தனது சம்பளத்தை அவர் குறைந்தபாடு இல்லையாம்.  ஒரு தயாரிப்பாளர் அவரை புக் செய்ய கதை கூற சென்றுள்ளாராம். அப்போது கதை கூட கேட்காமல், தனது சம்பளம் 75 லட்சம் கொடுத்தால் நடிக்கிறேன் என்று கூறி விட்டாராம்.

இதனை கேட்ட தயாரிப்பாளர் அதற்கு பிறகு அனுபமாவை அவர் தொடர்பு கொள்ளவே இல்லையாம். அந்த அளவுக்கு கறாராக இருக்கிறாராம் அனுபமா. தொடர்ந்து படவாய்ப்புகள் வராத காரணத்தால் தெலுங்கு சினிமாவை விட்டு மீண்டும் மலையாள சினிமா பக்கம் சென்று விடலாமா என்ற யோசனையில் அனுபமா இருக்கிறார் என்றும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top