ஒரு செல்ஃபிக்காக இப்படியா பண்ணுவீங்க? ரசிகர்களின் செயலால் தெறித்து ஓடிய நடிகை....!
பொது இடங்களில் அல்லது படப்பிடிப்பு தளங்களில் தங்களுக்கு பிடித்த நடிகர் அல்லது நடிகைகளை கண்டால் ரசிகர்கள் ஓடோடி சென்று அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் சில நேரங்களில் ரசிகர்கள் கொஞ்சம் எல்லை மீறியும் நடக்கதான் செய்கிறார்கள்.
தற்போது அப்படி ஒரு சம்பவத்தை தான் பார்க்க போகிறோம். அதன்படி பிரேமம் படம் மூலம் திரையுலகில் அறிமுகமாகி தமிழில் தனுஷுடன் கொடி படத்தில் இணைந்து நடித்த இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் தெலுங்கானாவில் ஒரு ஷாப்பிங் மால் திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார்.
மால் திறப்பு விழாவிற்கு நடிகை அனுபமா வருகிறார் என்ற தகவல் தெரிந்த அவரது ரசிகர்கள் காலை முதல் அவருக்காக அங்கு காத்து கொண்டிருந்துள்ளனர். அனுபமாவும் சிரித்துக் கொண்டே மாலுக்குள் நுழைந்து திறந்து வைத்துவிட்டு மீண்டும் அவரது காரில் ஏறி கிளம்ப தயாராகியுள்ளார்.
ஆனால் அவரது ரசிகர்களோ தங்களுடன் செல்ஃபி எடுக்க வேண்டுமென்றும், உடனடியாக கிளம்பாமல் சிறிது நேரம் இருக்க வேண்டுமென்றும் கூறியுள்ளனர். இதையெல்லாம் கண்டுகொள்ளாத அனுபமா அவரது காரில் ஏற முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் சிலர் அவருடைய கார் டயரில் இருந்து காற்றை பிடிங்கிவிட்டுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அனுபமா மீண்டும் மாலுக்குள் செல்ல, மால் நிர்வாகத்தினர் உடனடியாக மற்றொரு காரை ஏற்பாடு செய்து அவரை பத்திரமாக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் பதறிப்போன அனுபமா இனிமேல் கூடுதல் பாதுகாப்பு இருந்தால் மட்டுமே இதுபோன்ற கடைதிறப்பு விழாக்களில் பங்கேற்பேன் என கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாராம்.