எந்த ஆங்கிளில் பார்த்தாலும் செம ஹாட்டு!... சிக்குன்னு காட்டி இளசுகளை இழுக்கும் அனுபமா...

மலையாளத்தில் தனது கேரியரை துவங்கியவர்தான் அனுபமா பரமேஸ்வரன். கேரளாவை சேர்ந்த அனுபமா பிரேமம் திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் சில மலையாள படங்களில் நடித்த அனுபமா ஒரு கட்டத்தில் தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார்.
தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெறவே தொடர்ந்து தெலுங்கு மொழியில் நடிக்க துவங்கினார். மலையாளத்தை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்தார். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி படத்தில் நடித்தார். அதர்வாவுடன் ஒரு படத்தில் நடித்த அனுபமா சமீபத்தில் வெளியான சைரன் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு என தொடர்ந்து நடித்து வரும் அனுபமா தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார்.
அது என்னவோ தெலுங்கில் வருவது போல தமிழில் இவருக்கு வாய்ப்புகள் வருவதில்லை. ஆனாலும், நல்ல கதை கிடைத்தால் நடிப்பதற்கு தயாராகவே இருக்கிறேன் என சொல்லி வருகிறார்.
ஒருபக்கம் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காகவும், மார்க்கெடை தக்க வைப்பதற்காகவும் விதவிதமான உடைகாளை அணிந்து அழகை காட்டி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அனுபமாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்திருக்கிறது.