சைடு போஸில் கிறங்கடிக்கும் அனுபமா... கண்ணை மூடாமல் பார்க்க வைக்கும் தங்கச்சிலையா..?!

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளத்தில் ஹிட் அடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்ற பிரேமம் படம் மூலம் நடிக்க துவங்கினார். அதன்பின் சில மலையாள திரைப்படங்களில் நடித்தார்.
அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். அவர் நடித்த படங்கள் ஹிட் அடிக்கவே அபர்ணாவுக்கு தொடர் வாய்ப்புகள் கிடைத்தது. எனவே, தெலுங்கில் அதிக படங்களில் நடிக்க துவங்கினார். தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் மட்டும் நடித்தார்.
அனுபமா நடித்திருந்த கார்த்திகேயா 2 படம் ஆந்திராவில் 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. தள்ளிப்போகாதே என்கிற படத்தில் அதர்வாவுடன் நடித்திருந்தார். மேலும், ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த சைரன் படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக அசத்தி இருந்தார். இப்போது சில புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
அதில் பைசன் என்கிற தமிழ் படமும் ஒன்று. ஒருபக்கம், மாடலிங் அழகி போல விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார். இதன் மூலம அவருக்கு புதிய பட வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.
அந்தவகையில், கருப்பு நிற கவர்ச்சி உடையில் கட்டழகை நச்சென காட்டி அனுபமா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்திருக்கிறது. அனுபமாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.