---Advertisement---

டிரெய்லர்னு சொல்லிட்டு ஒரே அனுபமாவோட பிட்டு படமா இருக்கே!.. டில்லு ஸ்கொயர் வேறலெவல் மஜா தான்!..

Published on: February 14, 2024
---Advertisement---

இயக்குநர் மலிக் ராம் இயக்கத்தில் சித்து மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகி உள்ள டில்லு ஸ்கொயர் (Tillu Square) திரைப்படத்தின் டிரெய்லர் காதலர் தினத்தை முன்னிட்டு தற்போது வெளியாகி உள்ளது.

இந்த வாரம் வெளியாக உள்ள ஜெயம் ரவியின் சைரன் படத்தில் நடித்துள்ள அனுபமா பரமேஸ்வரன் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: சினிமாவுக்கு வருவதற்கு முன் நாகேஷ் பார்த்த வேலை இதுதான்… இவருக்கு இப்படி ஒரு திறமையா?..

மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் அனுபமா பரமேஸ்வரன். அந்த படம் ஹிட் அடித்த நிலையில், தமிழில் தனுஷுக்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்திருந்தார்.

மேலும், அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிப் போகாதே உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அடுத்து ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சைரன் படத்தில் ஜெயம் ரவிக்கு மனைவியாக ஃபிளாஷ்பேக் காட்சிகளில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: என் படங்கள் ஓடாமல் போனதுக்கு காரணம் இதுதான்!.. கண்டுபிடிக்க 3 வருஷம் ஆச்சி!. கார்த்திக் கொடுத்த பேட்டி!..

இந்நிலையில், வரும் மார்ச் 29ம் தேதி அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் தெலுங்கில் உருவாகி உள்ள டில்லு ஸ்கொயர் திரைப்படம் வெளியாகிறது. அந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

டிரெய்லர் முழுக்கவே அனுபமா பரமேஸ்வரன் உடன் ஹீரோ சித்து லிப் லாக் கிஸ் அடிப்பது, மோசமான ஆடையில் உடலுறவு பற்றி அனுபமா பரமேஸ்வரன் பேசுவது என்று தான் டிரெய்லரே கட் செய்யப்பட்டு இருக்கிறது.

இளைஞர்களை நிச்சயம் கவரும் அளவுக்கு படு கில்மாவான போஸ்டர்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்து விட்டனர்.