கோலிவுட்டில் களமிறங்கும் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக்..! ஹீரோ இந்த நடிகர் தானாம்..!

Anurag Kashyap: தமிழ் சினிமாவில் முக்கிய படங்களில் தலைகாட்டும் அனுராக் பாலிவுட்டின் டாப் இயக்குனர் லிஸ்ட்டில் இருப்பவர். அவர் நடிப்பை மட்டுமே ஆர்வம் காட்டி வந்த நிலையில் தற்போது மீண்டும் இயக்குனராக களமிறங்க இருக்கிறார்.
1990களில் இருந்து பாலிவுட்டில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹிட் அடித்து வருபவர் தான் அனுராக் கஷ்யப். அவரின் நிறைய இந்தி படங்கள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் அதிக தமிழ் ரசிகர்களுக்கு அவரை அறிமுகப்படுத்தியது என்னவோ இமைக்கா நொடிகள் திரைப்படம் தான்.
இதையும் படிங்க: வெள்ளித்திரையில் வெற்றிக்கண்ட பிக் பாஸ் ஹீரோக்கள்!.. எல்லாமே தரமான சக்சஸ் தானுங்க!..
சாதுவான முகத்துடன் அவரின் மிரட்டல் நடிப்புக்கே அப்ளாஸ் வாங்கினார். இதனால் அவருக்கு நிறைய தமிழ் பட வாய்ப்புகள் கூட தொடர்ச்சியாக வந்தது. அவரும் லோகேஷின் படத்தில் ஒரே ஒரு சீனில் நடிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இருந்தார். அதை அப்படியே நிறைவேற்றும் விதமாக லியோவில் ஒரே காட்சியில் சுட்டுக் கொல்லப்படுவார் அனுராக்.
இந்நிலையில் அனுராக் தமிழ் சினிமாவில் நடிகராக இல்லாமல் முதல்முறையாக இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். நிறைய வித்தியாசமான கதைகளை எழுதி ஹிட் அடித்த அவரின் படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. மேலும் இப்படத்தில் அவரின் நாயகனாக நடிக்க இருப்பது ஜி.வி.பிரகாஷ் தானாம்.
இதையும் படிங்க: இப்படி ஒரு வார்த்தை வாழ்க்கையையே அழிச்சிரும்! நிக்ஷனை கடுமையாக விமர்சித்த முன்னணி நடிகை