தமிழ் தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் ஒரு கலக்கு கலக்கியவர் தான் நடிகை அனுஷ்கா. இவர் வரலாற்று படங்களான அருந்ததி, பாகுபலி போன்ற படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வந்த அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடித்தார்.
அங்கு தான் இவரின் கெட்டகாலம் தொடங்கியது என்று கூறலாம். ஆம் இப்படத்திற்காக உடல் எடையை கூட்டிய அனுஷ்காவால் அதன் பின்னர் எடையை குறைக்க முடியவில்லை. ஒருபுறம் பட வாய்ப்புகள் அதிகரிக்க மற்றொரு புறம் உடல் எடை அதிகரித்தது. அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தது.
பாகுபலி 2 படத்திற்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்த அனுஷ்கா இடைப்பட்ட காலத்தில் எடையை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன் காரணமாக எடை குறைந்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறிய அனுஷ்காவிற்கு மீண்டும் பட வாய்ப்புகள் வர தொடங்கியது.
சமீபத்தில் கூட இரண்டு புதிய படத்தில் அனுஷ்கா ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்படி உள்ள சூழலில் சமீபத்தில் நடந்த ஆர்ஆர்ஆர் பட நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுஷ்காவை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அனுஷ்கா மீண்டும் உடல் எடை கூடி காணப்பட்டது தான்.
பழைய தோற்றத்தில் இருந்த அனுஷ்கா அந்த நிகழ்ச்சியில் உடல் எடை அதிகரித்து கொழு கொழுவேன பப்லிமாஸ் போல தோற்றமளிக்கிறார். இதனை கண்டு ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தாலும் நீங்க எப்படி இருந்தாலும் பரவாயில்லை எப்பவும் நீங்க தான் எங்க பேவரைட் என அனுஷ்காவிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
'திரைக்கதை மன்னன்'…
Actress vedhika:…
ஆறு ஆண்டுகளுக்கு…
ஊதாரி என்ற…
நான் சினிமாவில்…