
Cinema News
காணாமல் போன அனுஷ்கா.! இப்போ என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா.?!
தற்போது தான் பான் இந்தியா பான் இந்தியா என்று முன்னணி நடிகர்களின் படங்களை டப் செய்து வேற்று மொழியில் வெளியீடு செய்து அங்கு கல்லா கட்ட தவித்து வருகின்றனர். ஆனால் 2009ஆம் ஆண்டே தெலுங்கில் எடுத்த அருந்ததி படத்தை தனது அசுரத்தனமான நடிப்பின் மூலம் தென்னிந்திய மொழிகளில் பேய் ஹிட் கொடுத்த நடிகை அனுஸ்கா.
அருந்ததி எனும் ஒரு படம் மூலம் இந்தியா முழுவதும் தெரிந்த நடிகையாகி விட்டார் அனுஷ்கா. அதிலும், தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆறடி உயரம், கட்டுமஸ்தான தேகம் , லட்சணமான முக அழகு என தற்போதும் இளைஞர்களின் கனவு கன்னியாக வாழ்ந்து வருகிறார் அனுஷ்கா.
அடுத்தடுத்து, விஜய், சூர்யா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என தொடர்ந்து நடித்து வந்த அனுஷ்கா திடிரேன சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டது போல ஆகிவிட்டது. அந்தளவுக்கு, சைலன்ஸ் (நிசப்தம்) எனும் திரைப்படத்தை அடுத்து அவர் என்ன செய்கிறார் எனபதே தெரியாமல் இருந்து வந்தது.
இதையும் படியுங்களேன் – சிவகார்த்திகேயன் மீது கடுப்பில் எஸ்.ஜே.சூர்யா.!? மேடையில் அப்பட்டமாக தெரிந்துவிட்டதே..!
தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது. ஆம், மீண்டும் தமிழுக்கு நடிக்க வருகிறாராம் அனுஷ்கா. அந்த படத்தை மதராசபட்டினம், தலைவா, தலைவி ஆகிய படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய் இந்த படத்தை இயக்க உள்ளாராம். இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.