அனுஷ்காவுடன் ஜோடி சேரும் பிரபல நடிகர்... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே...

ஒரு சமயத்தில் கோலிவுட் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை என்றால் அது அனுஷ்கா தான். இவ்வளவு உயரத்தில் ஹீரோயினா என பல நடிகர்களே ஆச்சரியப்பட்ட நடிகை தான் அனுஷ்கா. ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த அனுஷ்கா தற்போது காணாமலே போய்விட்டார்.
அருந்ததி, பாகுபலி போன்ற சரித்திர படங்கள் என்றாலே அனுஷ்காவை தான் தேடுவார்கள். ஏனென்றால் இதுபோன்ற சரித்திர படங்களுக்கு அனுஷ்கா தான் பொருத்தமாக இருப்பார். பாகுபலி தேவசேனாவை இன்னும் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். பாகுபலி படத்தில் அனுஷ்கா புகைப்படத்தை பார்த்து ரம்யா கிருஷ்ணன் அழகே பொறாமைப்படும் பேரழகு என கூறுவார். உண்மையில் அனுஷ்கா அப்படி ஒரு அழகு தான்.

anushka shetty
ஆனால் பேராசையால் அனுஷ்காவே அவரின் கெரியரை கெடுத்து கொண்டார். சோலோ நாயகியாக நடிக்கிறேன் என்ற பெயரில் இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக உடல் எடையை தாறுமாறாக ஏற்றி பின் அதை குறைக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். இதனால் பல பட வாய்ப்புகளை அனுஷ்கா இழந்துள்ளார்.
பின்னர் இறுதியாக உடல் எடையை குறைத்த அனுஷ்கா கடைசியாக சைலன்ஸ் என்ற படத்தில் காது கேட்காத வாய் பேச முடியாத பெண்ணாக நடித்திருந்தார். ஆனால் இப்படம் அவருக்கு பெரியளவில் கைகொடுக்கவில்லை. கடந்த ஓராண்டுக்கும் மேலாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அனுஷ்காவிற்கு தற்போது ஒரு சில வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
அந்த வகையில் தெலுங்கு படம் ஒன்றில் கமிட்டாகி உள்ள அனுஷ்கா அடுத்ததாக தமிழ் படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். தமிழில் பிரபல இயக்குனரான ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தான் அனுஷ்கா நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் அனுஷ்கா உடன் நடிகர் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

vijay sethupathi
நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழில் விக்ரம், விடுதலை, காத்துவாக்குல 2 காதல், மாநகரம் இந்தி ரீமேக்ஸ் வெப் சீரிஸ் என பல படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். இது தவிர இவரது நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளன. இந்நிலையில் அனுஷ்கா உடன் புதிய படத்தில் அவர் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.