குருவுடன் தஞ்சம் புகுந்த அனுஷ்கா....! அப்போ இனிமே வரமாட்டாங்களா..? ஏங்கும் ரசிகர்கள்...!
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. தமிழ், தெலுங்கில் முன்னனி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா பல ஹிட் படங்களை கொடுத்தார்.
இவரது நடிப்பில் வெளிவந்த அருந்ததி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து புராணம் சம்பந்தப்பட்ட கதைகளில் நடிக்க ஆரம்பித்தார். அந்த படங்கள் முழுவதும் பெரிய அளவில் பேசப்பட்டது.
இதையும் படிங்கள் : ஆண் ஷகீலா என அழைக்கப்பட்ட டாப் கோலிவுட் ஸ்டார்… அய்யோ இது தெரியுமா?
அதன் பின் பாகுபாலி படத்தில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார். மேலும் தமிழிலும் பெரிய பெரிய ஹிட் படங்களை கொடுத்தார். மேலும் தெலுங்கு நடிகர் பிரபாஸுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அதுவும் வதந்திகளாகவே போய்விட்டது.
பாகுபாலிக்கு பின் அவரை எந்த படங்களிலும் பார்க்க முடியவில்லை. அடிப்படையில் இவர் யோகா டீச்சர் என்பதால் மேலும் யோகா பயிற்சி எடுக்க துபாய் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு தான் அவரின் யோகா குரு இருக்கிறாராம். அவரிடம் பயிற்சி எடுக்க துபாய் சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.