42 வயதிலும் அடங்காத ஆசை...! முன்னால் காதலனை நிர்பந்தபடுத்திய அனுஷ்கா...!
தென்னிந்திய சினிமா உலகில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் முன்னனி நடிகையாவார். ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். கடந்த பத்து வருடங்களில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் சூர்யா, கார்த்தி, ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னனி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
நடித்த படங்கள் பெரும்பாலும் நல்ல வரவேற்பையே பெற்றன. மேலும் தெலுங்கிலும் பல வெற்றிப் படங்களையும் கொடுத்துள்ளார். நடிகர் பிரபாஸுடன் ஜோடி சேர்ந்த இவர் பாகுபாலி என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து ஒட்டு மொத்த இந்தியாவும் இவர்களின் கெமிஸ்ட்ரியை இந்த படத்தில் பார்த்து உண்மையிலயே இவர்கள் சேர்ந்தால் பிரம்மாதமாக இருக்கும் என்று கூறும் அளவிற்கு நடித்திருந்தனர். அதே போல் இவர்களும் வெளியில் ஒன்றாக சுற்றி வந்தனர்.
ஆனால் எங்களுக்குள் காதல் எல்லாம் இல்லை என்று மறுத்த இருவரும் சில காலம் அவர்களை ஒன்றாக பார்க்கமுடிவதில்லை. இந்த நிலையில் மீண்டும் அனுஷ்கா பிரபாஸிடம் தனக்காக பட வாய்ப்புகளை ஏற்படுத்தி தருமாறு பிரபாஸிடம் கேட்டு வருகிறாராம். சொல்லப்போனால் மிகவும் கெஞ்சி வருவதாக தகவல் வெளியானது.
அதனால் பிரபாஸ் தற்பொழுது நடிக்கும் புதிய படத்தில் அனுஷ்கா இணைய போவதாக கூறுகிறார்கள். ஏற்கெனவே கீர்த்தி ஷெட்டி, மாளவிகா மோகனன் அந்த படத்தில் இருக்க தற்போது மூன்றாவது நாயகியாக அனுஷ்காவும் சேர்ந்துள்ளார். இந்த தகவலை மூத்த பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரெங்கனாதன் கூறினார்.