ஏன் குழந்தைய வச்சு பிச்சை எடுக்குறீங்க? நெட்டிசன் விமர்சனத்தால் கொந்தளித்த சின்னத்திரை தம்பதிகள்….!

Published on: April 27, 2022
anwar
---Advertisement---

வெள்ளத்திரையில் எப்படி காதல் நட்சத்திர தம்பதிகள் உள்ளார்களோ அதேபோல் சின்னத்திரையிலும் பல ஜோடிகள் காதல் திருமணம் செய்து கொண்டு நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அதில் பிரபலமான நட்சத்திர தம்பதிகள் தான் சமீரா மற்றும் அன்வர்.

இவர்கள் இருவரும் இணைந்து பகல் நிலவு என்ற சீரியலில் நடித்தபோது காதல் மலர இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் தான் ஆண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதிகள் அவர்களின் யூடியூப் சேனலில் நிறைய வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

smeera

அந்த வகையில் தான் சமீபகாலமாக அவர்களின் குழந்தையை வைத்து வீடியோ வெளியிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சிலர் இந்த தம்பதிகளை விமர்சிக்கும் விதமாக, “ஏன் இப்படி குழந்தையை வச்சு பிச்சை எடுக்கிறீர்கள்? உங்களுக்கு மட்டும்தான் குழந்தை இருக்கா?” என மிகவும் மோசமாக கமெண்ட் செய்துள்ளனர்.

இதனை கண்டு கடுப்பான நடிகர் அன்வர் “உங்கள் எல்ல மோசமான கமெண்ட்களையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துள்ளோம். உங்களுக்கு இந்த ஒரு முறைதான் வாய்ப்பு. நீங்களே மன்னிப்புக் கேட்டுவிட்டால் முடிந்தது. ஆனால் மீண்டும் தொடர்ந்தால் சைபர் கிரைம் போலீஸுக்கு செல்வோம்” என விமர்சித்தவர்களை மிகவும் பொறுமையாக கண்டித்துள்ளார்.

anwar sameera

இதேபோல் சமீராவும், “நாம் அனைவரும் இங்கு ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கதான் உள்ளோம். ஆனால் நீங்கள் என்னை இழிவு செய்ய நினைத்தால் இதுவரை நான் பொறுமையாக இருந்தது போல அமைதியாக இருக்கமாட்டேன். நாங்கள் சைபர் கிரைம் போலீஸிடம் புகார் அளிக்க உள்ளோம். எங்களை இழிவு செய்ய நினைப்பவர்களுக்கு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment