இவர் கூட தான் டேட்டிங்...கல்யாணம் பற்றி வாய் திறக்கும் அபர்ணா முரளி...!
X
ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி, அதன் பின்னர் மலையாள சினிமாவில் முதன்மை நாயகியாக அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி.
8 தோட்டாக்கள் எனும் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானாலும், அதன் பின்னர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படத்தில் பொம்மி எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் அபர்ணா.
இவர் நடிப்பில் சமீபத்தில் வீட்ல விஷேசம் எனும் திரைப்படம் வெளியானது. ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படதில் ஹீரோயினாக அபர்ணா நடித்துள்ளார்.
இந்த நிலையில் இவரிடம் அண்மையில் பேட்டி எடுக்கும் போது இதுவரைக்கும் டேட்டிங் போனதுண்டா? என கேட்டனர். அதற்கு அவர் டேட்டிங் போறதுக்கு சரியான ஆளை தான் தேடிக்கொண்டு இருக்கிறேன் என கூறினார். மேலும் திருமணம் பற்றி கேட்டதற்கு எனக்கு பாய் ஃபிரண்டே இல்லை. இதுல எங்க கல்யாணம் என வருத்தத்தில் பதில் கூறினார்.
Next Story