
Cinema News
என்ன தப்பா போட்டோ எடுத்து நெட்ல போட்டுட்டாங்க.! வேதனையில் சூரரை போற்று நாயகி.!
ஒரு சில தென்னிந்திய திரைப்படங்களில் துணை நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி, அதன் பின்னர் மலையாள சினிமாவில் முதன்மை நாயகியாக அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி.
8 தோட்டாக்கள் எனும் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானாலும், அதன் பின்னர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படத்தில் பொம்மி எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் அபர்ணா.
இவர் நடிப்பில் சமீபத்தில் வீட்ல விஷேசம் எனும் திரைப்படம் வெளியானது. ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படதில் ஹீரோயினாக அபர்ணா நடித்துள்ளார்.
இதற்காக பல்வேறு நேர்காணலில் கலந்துகொண்டார். அதில் ஒரு நேர்காணலில் பேசுகையில், தான் முதன் முதலாக மாடலிங் துறையில் நுழைந்த போது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
இதையும் படியுங்களேன் – பாக்ஸ் ஆபிஸ் கிங் திரும்ப வருகிறார்.. சொல்லாமல் சொல்லிய தளபதி 66 படக்குழு.! வெறித்தனமான அப்டேட் இதோ…
அதாவது, ‘ ஒரு மாடலிங் நிகழ்ச்சிக்கு அதற்கான பிரத்யேக உடையில் செல்கையில், அது கொஞ்சம் அசௌகரியமாக இருந்தது, நான் கொஞ்சம் உடல் பருமன் போல இருப்பேன். அதனால் அந்த உடை எனக்கு சரியாக பொருந்தவில்லை. அப்போது சிலர் வேறு விதமாக போட்டோ எடுத்துவிட்டனர். அந்த புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டது. அந்த சம்பவம் எனக்கு மிகவும் அசௌகரியமாக இருந்தது. அந்த சம்பவம் என்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. அதன் பிறகு மாடலிங் பேஷன் ஷோ என்றாலே அந்த ஞாபகம் தான் வரும். ‘ என்றவாறு அந்த பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார் சூரரை போற்று, வீட்ல விஷேசம் நாயகி அபர்ணா பாலமுரளி.