விஜய் எப்படி சமாளிச்சாரோ தெரியல...வைரலாகும் பீஸ்ட் பட நடிகையின் புகைப்படங்கள்...

by சிவா |
aparna
X

டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

beast

மேலும், இப்படத்தில் 2வது கதாநாயகியாக நடித்து வருபவர் அபர்ணா தாஸ். இவர் கேரளாவை சேர்ந்தவர். சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஸடைலான லுக்கில் விஜய் டிரம்ஸ் வாசிப்பது போலவும், அபர்ணா ஒரு இசைக்கருவியை வாசிப்பது போலவும் ஒரு புகைப்படம் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே வைரலாகியது.

aparna

அந்த புகைப்படம் பீஸ்ட் படத்தின் 100 வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த போஸ்டரை பார்த்த பின் தான் பலருக்கும் அபர்ணா தாஸ் பற்றி தெரியவந்துள்ளது.

aparna

இந்நிலையில், அபர்ணா தாஸின் சமீபத்திய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

aparna

Next Story