பீஸ்ட் படத்தில் இணைந்த இளம் நடிகை... பூஜா ஹெக்டேவை பீட் பண்ணுவாரா?

by பிரஜன் |   ( Updated:2021-09-22 10:43:55  )
Pooja Hegde
X

Pooja Hegde

தளபதியின் பீஸ்ட் படத்தில் அபர்ணா தாஸ்!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்ற நிலையில் கடைசிகட்ட பணிகள் நடந்து வருகிறது.

அஜித்தின் வலிமை படம் வருகிற பொங்கல் தினத்தில் ரிலீஸ் என அதிகாரபூர்வ அறிவிப்பு வந்ததையடுத்து போட்டியாக விஜய்யின் பீஸ்ட் படமும் அதே தினத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்தது இந்நிலையில் பீஸ்ட் படத்தை குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுளளது.

aparna-das

aparna das

அதாவது இப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக அபர்ணா தாஸ் ஒப்பந்தாகி படப்பிடிப்பில் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர் பூஜா ஹெக்டேவுக்கு போட்டியாக நடிப்பாரா? என ரசிகர்கள் கேள்வி கேட்க துவங்கியுள்ளனர்.

Next Story