Cinema News
இசை மட்டுமா இவருக்கு அத்துப்புடி?.. ஏஆர் ரஹ்மானின் அறியாத இன்னொரு பக்கம்
AR Rahman:இன்று உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார் இசை புயல் ஏ ஆர் ரகுமான். சிறு வயதிலிருந்தே இசையில் ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என நினைத்து இன்று தொட முடியாத சாதனையை செய்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான். இவருடைய தந்தையும் ஒரு இசை குழுவில் இசையமைப்பாளராக பணியாற்றி கொண்டிருந்தவர் தான்.
அவரிடம் இருந்து இசையை பற்றி சில நுணுக்கங்களை கற்று இன்று உலகமே போற்றும் ஒரு மாபெரும் இசை கலைஞராக மாறி இருக்கிறார். திலீப் குமார் எனும் இயற்பெயர் கொண்ட இவர் பின்னாளில் ரகுமானாக மாறியது அனைவருக்கும் தெரியும். எம் எஸ் விஸ்வநாதன் இளையராஜா ஆகியோரின் இசைக் குழுவிலும் ஏ ஆர் ரகுமான் பணியாற்றி இருக்கிறார் .
இதையும் படிங்க: இப்படி போர் அடிச்சிருக்க கூடாது… கொட்டுக்காளி படத்தில் சூரி மட்டும்தான்… ட்விட்டர் விமர்சனம்
இளையராஜாவிடம் கீபோர்டு ப்ளேயராக பணியாற்றியவர் தான் இந்த ஏ ஆர் ரகுமான். ஆரம்பத்தில் சில விளம்பர படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தவர் மணிரத்தினத்தின் அறிமுகம் கிடைத்து ரோஜா திரைப்படத்தில் முதன்முதலாக தன்னுடைய இசையை மக்களிடம் கொண்டு சேர்த்தார் ஏ ஆர் ரகுமான். முதல் படமே தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது.
அதன் பிறகு இன்று வரை இசையில் ஒரு மாபெரும் ஆளுமையாக வளர்ந்து நிற்கிறார். எத்தனையோ விருதுகள் எத்தனையோ பரிசுகள். அதிலும் இந்தியாவிலிருந்து முதன் முதலில் இசையில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற ஒரே தமிழன் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் ஏ ஆர் ரகுமான். ரகுமானை பற்றி குறிப்பிடும் போது அவர் அவருடைய தாயார் மீது அதிக அன்பும் அக்கறையும் கொண்டவர் என்று நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: சொந்த சரக்குனா தில்லா இறங்கலாம்! தனுஷ் தயக்கம் காட்டுவதன் காரணம் இதுதானா?
அவரிடம் இருந்த இசை ஆர்வத்தை முதலில் அடையாளம் கண்டு இந்த உலகத்திற்கு காட்டியதே அவருடைய அம்மா தான். இந்த நிலையில் பிரபல இசை கச்சேரியான லக்ஷ்மன் ஸ்ருதியின் நிறுவனர் லக்ஷ்மன் ரஹ்மானை பற்றி சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். ஒரு சமயம் லஷ்மனிடம் இருந்த கி போர்டு பழுதடைந்து விட்டதாம்.
அன்று மாலை அவருக்கு ஒரு இசை கச்சேரி இருந்ததாம். அதனால் அந்.த கீ போர்டு பிளேயரை எடுத்துக்கொண்டு அவருக்குத் தெரிந்த ஒருவரிடம் சென்று இருக்கிறார் அவர் ரகுமானின் பெயரை பரிந்துரை செய்து அவரிடம் போய் காட்டு. சரி செய்து கொடுப்பார் என சொல்லி அனுப்பி இருக்கிறார். லஷ்மனும் அவருடைய சகோதரரும் அந்த கீ போர்டு பிளேயரை எடுத்துக் கொண்டு ரகுமான் வீட்டிற்கு செல்ல அவருடைய வீட்டு மாடியில் ரெக்கார்டிங்கில் இருந்தாராம் ரகுமான்.
இதையும் படிங்க: பரோட்டாவுக்கு மாவு பிசைஞ்சது வேஸ்ட்டா? கண்டீசனுடன் களமிறங்கும் விஜய்சேதுபதி
இவர்கள் வந்ததை அறிந்து கீழே வந்த ரகுமான் அந்த பிளேயரை பார்த்திருக்கிறார். ஒரு பத்து வினாடியில் மொத்த ப்ளேயரையும் கழட்டி அதில் இருக்கும் சிப் ஒன்று பழுதடைந்து விட்டதாகவும் அதை மாற்றி வேலை செய்து பாருங்கள் நன்றாக இருக்கும் எனவும் கூறினாராம். அது மட்டும் அல்லாமல் வேறு என்னென்ன பிரச்சனைகள் என்பதையும் ஒட்டுமொத்த பிளேயரையும் கழட்டி பார்த்து ஒரு மெக்கானிக்கல் மாதிரி வேலை பார்த்து தந்தாராம் ஏ ஆர் ரகுமான். இதைப் பற்றி லக்ஷ்மன் கூறும்போது ஒரு பக்கம் இசையமைப்பாளராகவும் இன்னொரு பக்கம் நல்ல ஒரு டெக்னீசியன் ஆகவும் இருக்கிறார் ரகுமான் என கூறினார்.