எல்லா செண்டர்லயும் ஹிட்டான அஜித் படம்.. விஜய் படத்தோட நிலைமை தெரியுமா? இவ்ளோ நாள் சொன்னது பொய்யா?

vijay
Vijay Ajith: தமிழ் சினிமாவில் இருபெரும் துருவங்களாக பல ஆண்டுகளாக கோலோச்சி வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். ரஜினி , கமல் கட்டிய அந்த கோட்டையை அடுத்ததாக இவர்கள் இருவரும்தான் காத்து வருகிறார்கள். இவர்களுக்கு அடுத்த படியாக யார் அந்த இடத்தை நிரப்ப இருக்கிறார்கள் என இதுவரை அறியப்படவில்லை.
இருவருமே ஒரே நேரத்தில் ஹீரோவாக சினிமாவிற்குள் வந்தவர்கள்தான். சமமான வெற்றித்தோல்விகளை சந்தித்தவர்கள். ஏராளமான ரசிகர் படைபலத்துடன் இன்று சினிமாவில் பெரிய ஆளுமையாக இருந்து வருகிறார்கள். விஜய் அஜித் படங்களின் ரிலீஸ் என்றால் ரசிகர்களுக்கு ஒரு தனி உற்சாகம்தான்.
இதையும் படிங்க: விஜய் எனக்கு நண்பர் எல்லாம் இல்லை!… அது எனக்கு ரொம்ப கஷ்டம் தான்… ஓபனாக பேசிய பிரசாந்த்…
கோலாகலமாக அந்த ரிலீஸ் நாளை கொண்டாடி தீர்த்து விடுகிறார்கள். இந்த நிலையில் திருப்பூர் சுப்பிரமணியன் சில தகவல்களை பகிர்ந்தார். அஜித் நடிப்பில் வெளியான ஆசை, காதல் கோட்டை படங்கள் எல்லாமே சென்னையில் ஒருவருடம் ஓடி வெற்றிபெற்றதாம். ஆனால் கோவையில் 100 நாள்கள்தான் ஓடியதாம்.
அதற்கு காரணம் மக்கள்தொகைதான் என்று கூறினார். விஜய் நடித்த பூவே உனக்காக திரைப்படமும் கோவையில் ஒருவருடம் ஓடியதாக சொல்லப்படுகிறதே? அந்தப் படம் மட்டும் எப்படி ஒரு வருடம் ஓடியது என நிருபர் கேட்டார்.
இதையும் படிங்க: எவ்ளோ பெரிய ஹீரோனாலும் இந்த நடிகையின் ஷாட்தான் ஃபர்ஸ்ட்.. அந்தளவுக்கு ராசியான நடிகை யார் தெரியுமா?
அதற்கு திருப்பூர் சுப்பிரமணி ‘யார் சொன்னது பூவே உனக்காக ஒரு வருடம் ஓடுச்சுனு? நான் தான் அந்தப் படத்தை கோவையில் ரிலீஸ் செய்தேன். ஒரு வருடம் எல்லாம் ஓடவில்லை’ என கூறி ஆனால் அஜித் நடித்த வாலி படம் எல்லா செண்டர்லயும் பெரும் ஹிட்டாச்சு என கூறினார்.
மேலும் அஜித்தின் பில்லா சமயத்தில் ரஜினிதான் உதவி செய்தார் என்று கூறுகிறார்களே அது உண்மையா? என்றும் கேட்க அதற்கு திருப்பூர் சுப்பிரமணி ‘அஜித்தும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்? அப்படியெல்லாம் ரஜினி பில்லா சமயத்தில் எந்த உதவியும் பண்ணவில்லை’ என்றும் கூறினார்.