More
Categories: Cinema News latest news

விஜயகாந்தை நல்லவருனு சொல்றீங்களே! அவருக்கு மேல ஒருத்தர் இருக்காரு.. யார சொல்றாரு?

தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். கிட்டத்தட்ட 150 படங்களுக்கும் மேல் நடித்து தமிழ் சினிமாவே போற்றும் நடிகராக மாறினார். சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியதோடு இல்லாமல் அரசியலிலும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தினார். மக்கள் மத்தியில் ஒரு அடுத்த எம்ஜிஆராகவே பார்க்கப்பட்டார் விஜயகாந்த்.

கருப்பு எம்ஜிஆர் என்றே அழைத்தனர். மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டவராகவும் ஏழை எளிய மக்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பவராகவும் இருந்தார். நடிகர்களிலேயே மிகவும் மதிக்கத்தக்க நல்லவராகவும் இருந்தார் விஜயகாந்த். ஆனால் சினிமா தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் ஒரு தகவலை பகிர்ந்தார்.

விஜயகாந்தை மட்டும் நல்லவர் என சொல்கிறீர்களே? அவரை விட மிகவும் நல்லவர் நடிகர் பிரபு என மாணிக்கம் நாராயணன் கூறினார்.அதாவது அஜித்தை வைத்து அசல் என்ற படத்தை சிவாஜி புரடக்‌ஷன் சார்பாக பிரபு தயாரித்தாராம். அவ்வளவுதான் மொத்த அசலையும் இழந்தார் பிரபு என மாணிக்கம் நாராயணன் கூறினார். மேலும் சிவாஜி புரடக்‌ஷனுக்காக ரஜினி சந்திரமுகி படத்தில் நடித்துக் கொடுத்தார்.

ஆனால் அஜித் என்ன செய்தார்? என கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும் பெரிய ராஜாங்க குடும்பமாக இருந்த பிரபு குடும்பம் இப்பொழுது ஏதோ சறுக்கலில் இருப்பதாகவும் மாணிக்கம் நாராயணன் கூறினார்.

எல்லாரையும் நம்புபவர் பிரபு. மிகவும் நல்லவர். அவரை மாதிரி யாரையும் இந்த தமிழ் சினிமாவில் பார்க்க முடியாது என மாணிக்கம் நாராயணன் கூறியிருக்கிறார்.

Published by
Rohini