Cinema History
அபூர்வ ராகங்கள் ரஜினிக்கு மட்டுமில்லை.. கமலுக்கும் அதுதான் முதல் படம்!. என்னப்பா சொல்றீங்க!…
Kamalhaasan: 4 வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பின் சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகியோரின் படங்களிலும் சிறுவனாக நடித்தார். ஆனால், டீன் ஏஜை எட்டிய பின் எந்த பக்கம் போவது என தெரியவில்லை.
ஏனெனில், சினிமாவை தேர்ந்தெடுக்கலாமா? அப்படி தேர்ந்தெடுத்தால் அதில் நடனம், நடிப்பு, இயக்கம் என எதை தேர்வு செய்வது என்கிற குழப்பம் அவரிடம் இருந்தது. இல்லை சினிமாவை விட்டு விட்டு வேறு எதேனும் வேலை செய்யலாமா என்றும் நினைத்தார். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
அப்போது பிரபலமாக இருந்த ஒரு நடன இயக்குனரிடம் உதவியாளராக சேர்ந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெயலலிதா ஆகியோருக்கு நடனம் சொல்லி கொடுத்திருக்கிறார் கமல். ஆனால், அப்படி அவர் வேலை செய்து கொண்டிருந்ததை பார்த்த நடிகர் ஜெமினி கணேசன் ‘இதை நீ பண்ணக்கூடாது’ என சொல்லி அவரை நேராக பாலச்சந்தரிடம் அழைத்து சென்றார்.
‘இவனை நீ நடிக்க வைக்க வேண்டும். இது என் ஆசை’ என சொல்ல அரங்கேற்றம் எனும் படத்தில் கமலை அறிமுகம் செய்து வைத்தார் பாலச்சந்தர். ஆனால், அதில் கமல் ஹீரோ இல்லை. ஒரு சின்ன வேடம்தான் கிடைத்தது. கமல் முதலில் ஹீரோவாக நடித்தது 1974ம் வருடம் வெளிவந்த கன்னியாகுமாரி என்கிற மலையாள படத்தில்தான்.
தமிழில் அவர் முதன் முதலாக முழு பட ஹீரோவாக நடித்தது பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில்தான். இந்த படத்தில்தான் ரஜினிகாந்தும் அறிமுகமானார். ரஜினிக்கு அது முதல் படம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், தமிழில் ஹீரோவாக கமலுக்கும் அது முதல் படம் என்பது பலருக்கும் தெரியாது.
அதன்பின் மூன்று முடிச்சி, 16 வயதினிலே, அவர்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, ஆடு புலி ஆட்டம் ஆகிய படங்களில் ரஜினியும் கமலும் இணைந்து நடித்தார்கள். ஒருகட்டத்தில் இருவரும் பேசி முடிவெடுத்து தனித்தனியாக நடிக்க துவங்கினார்கள். ரஜினி சூப்பர்ஸ்டாராகவும், கமல் காதல் மன்னனாகவும் மாறினார்கள் என்பதுதான் சினிமா வரலாறு.
இதையும் படிங்க: சந்திரமுகி 2 பிளாப் ஆனதுக்கு காரணமே லாரன்ஸ்தான்!.. உடைச்சி சொல்லிட்டாரே பி.வாசு!..