Connect with us

Cinema History

நண்பர்களிடம் ரஜினிகாந்த் விட்ட ரீல்… எப்படி சிக்கினார் தெரியுமா?

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முதல் படம் அபூர்வ ராகங்கள். இந்த வாய்ப்பே ரஜினிக்கு பெரிய போராட்டத்துக்கு பின்னர் கிடைக்க அதற்கு முன்னர் அவர் நண்பர்களிடம் விட்ட ரீல் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கண்டக்டராக வேலை செய்து வந்தார் ரஜினிகாந்த் நடிப்பில் மீது இருந்த ஆர்வத்தால் அந்த வேலையை விட்டு சென்னை திரைப்பட கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் படித்து வந்தார். படிப்பு முடியும் தருவாயில் தான் கே பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்.

இதையும் படிங்க: தலைவர் 171 பட டைட்டில் இதுதான்!.. வெளியான வீடியோ!. இது நம்ம சரத்குமார் பட டைட்டில் இல்ல!…

ஆனால் தன்னுடைய பெங்களூர் நண்பர்களிடம் அபூர்வராகங்கள் திரைப்படத்தில் தான் ஹீரோவாக நடிக்கிறேன். திரைப்படக் கல்லூரியில் என்னுடன் 36 பேர் படித்தாலும் பாலச்சந்தரின் பார்வை என் மீதுதான் பட்டு இருப்பதாக  ரீல் விட்டு கடிதம் எழுதி இருந்தார். எப்படியும் படம் பெங்களூருக்கு ஒரு வருடம் கழித்து தான் வரும். அதற்குள் நான் ஒரு பெரிய ஹீரோவாகிவிடலாம் என்பது ரஜினியின் கணக்கு.

ஆனால் படம் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகிய இரண்டு மாதத்தில் பெங்களூரிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் ரஜினியும் பெங்களூரில் தான் இருந்திருக்கிறார். நண்பர்கள் படத்தை தியேட்டரில் பார்க்கலாம் என ரஜினியையும் அழைத்துக் கொண்டு சென்றனர். தர்ம சங்கடத்தில் நெளிந்தவர்க்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் நண்பர்களுடன் தியேட்டருக்குள் சென்றுவிட்டார். படத்தின் டைட்டிலில்  சிவாஜி ராவ் என்ற பெயரை நண்பர்கள் தேடி கிடைக்காமல் போனது.

இதையும் படிங்க: விஜயை காப்பி அடிக்கிறீங்களா? சைக்கிளில் வந்த ரகசியத்தை பகிர்ந்த விஷால்.. நிலைமை மோசமா இருக்கு போல

அவர்களுக்கு தன் நண்பர் தான் ரஜினிகாந்தின் தெரியாமல் இருந்ததாம். அந்த நேரத்தில் இருந்த சங்கடத்தில் ரஜினியும் அதை சொல்லாமல் விட்டு இருக்கிறார். படம் இடைவெளியை நெருங்கிவிட்டது. ரஜினிகாந்த் நைசாக நழுவி விட்டாராம். படத்தில் ரஜினி இல்லை என நண்பர்கள் முடிவெடுத்து விடுகின்றனர். ரஜினி வந்தால் வெடிக்கலாம் என வைத்திருந்த பலூனில் காத்தை நீக்கிவிட்டு பாக்கெட்டில் போட்டுக்கொண்டனராம்.

படம் நன்றாக இருக்கிறது. முழுதாக பார்த்துவிட்டு போகலாம் என உட்கார்ந்திருக்கின்றனர். இடைவேளைக்கு பிறகு ரஜினிகாந்த் கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைகிறார். எங்கேயோ பார்த்த முகமாக இருக்கிறது என யோசித்த நண்பர்களுக்கு அது தன்னுடைய நண்பர் சிவாஜி ராவ் எனத் தெரிய அவசர அவசரமாக பலூனை ஊதி வெடித்து தங்களுடைய மகிழ்ச்சியை காட்டினராம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top