Connect with us
nayanthra

Cinema History

ஆபாசமாக ஓடிவந்த நயன்தாரா!.. ஆடிப்போன இயக்குனர்!.. சூர்யா படத்தில் நடந்தது கூத்து!..

ஹரி இயக்கிய ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நயன்தாரா. அதன்பின் ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். அதன்பின் சில வருடங்கள் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்தார். அப்போதெல்லாம் வெயிட் போட்டு கொஞ்சம் குண்டாகவே இருப்பார் நயன்தாரா.

ஒருகட்டத்தில் தீவிர உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டு உடல் இளைத்து அழகான தோற்றத்துக்கு மாறினார் அதன்பின்னரே ரசிகர்கள் அவரை கவனிக்க துவங்கினார்கள். பில்லா படத்தில் அசத்தலான கவர்ச்சி ரசிகர்களை ஏங்க வைத்தார். அவரின் நடிப்பில் வெளிவந்த ராஜா ராணி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடிக்க அவரின் மார்க்கெட் மேலே போனது.

nayan

எனவே, மாயா, நெற்றிக்கண் போல பெண் வேடத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க துவங்கி லேடி சூப்பர்டாராகவும் மாறினார். இப்போது வரை தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாராதான். நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தார். சில வருடங்களுக்கு பின் அவரை திருமணம் செய்து கொண்டார்.

இப்போது வளர்ப்பு தாய் மூலம் 2 குழந்தைகளுக்கு அம்மாவாகி குழந்தைகளுடன் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். நயன்தாரா இப்போதுதான் படப்பிடிப்பில் பல கண்டிஷன்களை போடுகிறார். ஆனால், வளரும்போது அவர் அப்படி இல்லை. இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்க்கும் குடைச்சல் கொடுக்காத ஒரு நடிகையாவே அவர் இருந்தார்.

nayan

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நயன்தாரா நடித்திருப்பார். ஒரு காட்சியில் சூர்யா அவரை துரத்திகொண்டு ஓடுவார். அப்போது நயன்தாரா மிகவும் லூசான ஆடை அணிந்திருந்ததால் மிகவும் ஆபாசமாக இருந்திருக்கிறது. இதைப்பார்த்த முருகதாஸ் உதவியாளரை அழைத்து இதை சொல்லி ‘ஒரு இறுக்கமான உள்ளாடையை உள்ளே அணிந்து அவரை ஓடி வரச் சொல்லுங்கள்’ என சொல்லி இருக்கிறார். அப்போது அவருக்கு கேரவான் கூட இல்லை.

உதவியாளர் அதை நயனிடம் சொல்ல புரிந்துகொண்ட நயன் ’பக்கத்தில் எதாவது கடை இருந்தால் வாங்கி வாருங்கள். அணிந்து கொண்டு நடிக்கிறேன்’ என சொல்ல உள்ளாடை வாங்கி வரப்பட்டது. கேரவான் இல்லாததால் ஒரு வேனின் பின்னால் சென்று அதை அணிந்து பின்னர் அந்த காட்சியில் நடித்திருக்கிறார். நயன் கொடுத்த ஒத்துழைப்பில் சந்தோஷப்பட்டாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.

google news
Continue Reading

More in Cinema History

To Top