விஜயின் அந்த படமே இவரோட கதைதான்.. விரட்டி விட்ட இயக்குனர்.. தூக்கி விட்ட நயன்தாரா..

விஜய் படம் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் பலதரப்பட்ட பிரச்சனைகளை சமாளித்த பிறகு தான் அந்த படமே வெளி வருகிறது. விஜய் படம் என்றாலே சர்ச்சை, சர்ச்சை என்றாலே அது விஜய் படம் தான் என்று தற்போது சூழல் மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக திருட்டு கதை சம்பவம் தமிழ் சினிமாவில் தலைவிரித்து ஆடுகிறது.
விஜயின் கத்தி பட சம்பவம் இதற்கு விதிவிலக்கல்ல. வெளியாவதற்கு முன்பும் வெளியான பின்பும் பல பிரச்சினைகளை சந்தித்தது. அதிலும் இப்படத்தின் கதை மீதான பிரச்சனை நீதிமன்றம் வரை சென்று பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. இயக்குனர் முருகதாஸ் படத்தின் கதையை அவருடைய உதவியாளரில் ஒருவரான மீஞ்சூர் கோபி நயினார் இடமிருந்து திருடி எடுக்கப்பட்டிருந்தது என்று அன்றைய காலகட்டத்தில் விஜயின் கத்தி படத்துக்கு மிகப்பெரிய அளவில் பிரச்சனை உருவானது.

gopi3
முருகதாஸ் அப்பொழுது மீஞ்சூர் கோபி இடம் கதை பற்றிய கலந்தாய்வு மேற்கொண்டார். அப்பொழுது அவருக்கு மதிய உணவு மற்றும் அலுவலகத்திற்கு வந்து செல்ல சிறிது பணமும் கொடுத்து உதவுகிறார் முருகதாஸ். முதலில் இந்த கதையில் அஜித் குமார் நடிப்பதாக இருந்தது. பின்னர் அஜித் குமார் இப்படத்தில் நடிக்க விருப்பமில்லை அவர் இந்த கதையை நிராகரித்து விட்டார் என்று சொல்லி மீஞ்சூர் கோபியை ஒதுக்கி வைத்துள்ளார். அவரும் தன்மானம் கருதி அதோடு ஏ.ஆர்.முருகதாஸ் சகவாசத்தை முடித்துக் கொண்டார்.
பின்னர் அந்த கதையை விஜய்யிடம் சொல்லி கத்தி படத்தை எடுத்து முடித்தார். அப்படத்தின் ட்ரைலரை பார்த்த கோபி இது நம்ம கதை போல் உள்ளதே என்று அங்கிருந்துதான் பிரச்சனை கிளம்பி இருக்கிறது. பின்னர் அவருக்கு நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டு ஒரு வழியாக பிரச்சனை முடிவுக்கு வந்து அந்த படம் வெளியானது. இந்த விஷயம் அறிந்து தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி ஹீரோக்கள் வாய்ப்பு கொடுப்பார்கள் என்று கோபி நயினார் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால் அவருக்கு யாரும் எந்தவித வாய்ப்பு வழங்கப்படவில்லை. மனம் நொந்து ஒதுங்கி இருந்த நிலையில் நிலையில்தான் இருண்டு கிடந்த அவருடைய வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்க வந்தவர்தான் நயன்தாரா. நடந்த பிரச்சனைகளை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அவர் கோபி நயினாரை அழைத்து நான் உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்குகிறேன் நீங்கள் என்னை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.
இதைக் கேட்டதும் கண்கள் இரண்டில் கண்ணீர் பொங்கி அழுகிறார். அதன் பிறகு நயன்தாராவிற்காகவே பிரத்தியேகமாக எழுதி உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் அறம். படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி மீஞ்சூர் கோபிக்கும் தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.