More
Categories: Cinema History Cinema News latest news

விஜயகாந்த் போல் ஒரு நடிகரை பார்க்கவே முடியாது!.. ஏ.ஆர்.முருகதாஸ் நெகிழ்ச்சி…

தமிழ் சினிமாவில் கஷ்டப்பட்டு வாய்ப்பு தேடி நடிகராக மாறியவர் விஜயகாந்த். சினிமாவில் வளரும் நேரத்தில் பல அவமானங்களை சந்தித்தவர். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கே போட்டியாக வளர்ந்தவர். சில சமயம் ரஜினி, கமல் படங்களுடன் விஜயகாந்த் நடித்த படம் வெளியாகி அந்த இரண்டு படங்களை விட அதிக வசூலை பெற்றது.

vijayakanth

தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் நடிகராக இருந்தவர். எல்லோருக்கும் உதவும் குணம் கொண்டவர். பல புதிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர், நடிகர்களை அறிமுகம் செய்தவர். அருண் பாண்டியன், நெப்போலியன், மன்சூர் அலிகான், சரத்குமார் ஆகியோரை தனது படங்களில் நடிக்க வைத்து வளர்த்துவிட்டவர்.

Advertising
Advertising

விஜயகாந்தை வைத்து ரமணா படத்தை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். ஊடகம் ஒன்றில் விஜயகாந்த் பற்றி பேசிய அவர் ‘விஜயகாந்தை போல ஒரு நடிகரை பார்க்கவே முடியாது. பொதுவாக நடிகர்கள் தான் நடிக்கும் படங்களில் தனக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் இருக்கும்படியும், தனக்கு மட்டுமே அதிக காட்சி இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், விஜயகாந்த் அப்படி எதுவுமே நினைக்காட்டார்.

captain

கேப்டன் பிரபாகரன் படத்தில் முதல் அரைமணி நேரம் சரத்குமார் மட்டுமே வருவார். அதன் பின்னர்தான் விஜயகாந்த் வருவார். அதேபோல், அந்த படத்தில் இரண்டு பாடல்கள் வரும். ஆனால், விஜயகாந்துக்கு பாடலே இருக்காது.  வேறு எந்த நடிகர் என்றாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என தெரிவித்தார்.

அதேபோல், கேப்டன் பிரபாகரன் படத்தில் நடன நடிகராக இருந்த மன்சூர் அலிகானை வில்லனாக அறிமுகம் செய்து வைத்தவர் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
சிவா

Recent Posts