நான் இருக்கும்போது நயன்தாராவா?!.. அசின் செய்த வேலையில் அப்செட் ஆன ஏ.ஆர்.முருகதாஸ்!...

20 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக இருந்தவர் அசின். கேரளாவை சேர்ந்த இவர் ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கிய உள்ளம் கேட்குமே படத்தில் அறிமுகமானார். அதன்பின் தமிழில் பல நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தார். விஜயுடன் சிவகாசி, காவலன், போக்கிரி ஆகிய படங்களில் நடித்தார்.
சூர்யாவுடன் கஜினி, வேல் ஆகிய படங்களில் நடித்தார். ஜெயம் ரவி உள்ளிட பல நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்தார். அஜித்குமாருடன் ஆழ்வார் மற்றும் வரலாறு ஆகிய படங்களில் நடித்தார். மிகவும் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டவர். கஜினி படத்தின் கதை, திரைக்கதையே இவரை சுற்றித்தான் அமைக்கப்பட்டிருக்கும்.

asin
கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் நடித்தார். விக்ரமுடன் மஜா படத்தில் நடித்திருந்தார். தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி படங்களிலும் அசின் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் பாலிவுட் சென்று அமீர்கானை வைத்து கஜினி படத்தை எடுத்தபோது அசினே அப்படத்திலும் நடித்தார்.
அதன்பின் சல்மான்கானுடன் ஒரு படத்தில் நடித்தார். மார்க்கெட் பீக்கில் இருக்கும்போது தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை நிறுத்திவிட்டார். தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் கஜினி படத்தில் இவர் ஏற்ற கல்பனா கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
அதேநேரம், இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது ஏ.ஆர்.முருகதாஸை அவர் கதறவிட்ட சம்பவமும் நடந்தது. கதைப்படி மும்பையில் சிவப்பு விளக்கு பகுதியில் விற்கப்படவிருந்த குழந்தைகளை அசின் காப்பாற்றி ரயில் மூலம் சென்னை அழைத்து வருவார். அந்த காட்சியை படம்பிடிக்க எழும்பூர் ரயில் நிலையத்தில் அனுமதி வாங்கி இருந்தார் முருகதாஸ்
படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் ‘ஒரு பாடல் பாக்கி இருக்கிறதே. அதை எப்போது எடுப்பீர்கள்?’ என அசின் கேட்க ‘அந்த பாட்டு உங்களுக்கு இல்லை. நயன்தாராவுக்கு’ என முருகதாஸ் சொல்ல கோபமடைந்தார் அசின். கேரவானுக்கு போனவர் 2 மணி நேரம் கீழே இறங்கவே இல்லை. அதோடு, எனக்கு வயிற்று வலி. நடிக்க முடியாது எனவும் சொல்லி இருக்கிறார். இதனால் அப்செட் ஆகி உட்கார்ந்துவிட்டாராம் முருகதாஸ். அதன்பின் ஒருவழியாக அவரை சமாதானம் செய்து அந்த காட்சியை எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நயன்தாரா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.